அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

பொறியியல் கல்வி! பொறியியலின் முதுகெலும்பு மின்னணுவியல்!

பொறியியல் கல்வியில் முதுகெலும்பாக இருக்கும் மின்னணுவியல் படிப்பு பற்றி..

News image

மின்னணுவியல் பொறியியல்

ENS

Updated On :9 பிப்ரவரி 2026, 7:03 am

என். தமிழ்ச்செல்வன்

மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல்துறை என்பது தொழில்நுட்ப வளர்ச்சியின் முதுகெலும்பாக திகழ்கிறது. இன்றைய உலகில் நாம் பயன்படுத்தும் பெரும்பாலான தொழில்நுட்பங்கள் - ஸ்மார்ட்போன்கள், இணையம், தொலைக்காட்சி, வானொலி, மருத்துவ உபகரணங்கள், தானியங்கி வாகனங்கள் என எல்லாவற்றிலும் மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியலின் பங்களிப்பு இன்றியமையாதது.

இத்துறை குறித்து விஐடி பல்கலைக்கழக மின்னணு பொறியியல் பள்ளியின் கல்வி தலைவர் முனைவர் எம். ஜாஸ்மின் பெமீனா பிரியதர்ஷினி கூறியதாவது:

21-ஆம் நூற்றாண்டில் தகவல் பரிமாற்றம் மற்றும் மின்னணு சாதனங்களின் வளர்ச்சி இந்ததுறையின் முக்கியத்துவத்தை பல மடங்கு உயர்த்தியுள்ளது. இன்றைய காலகட்டத்தில், மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியாளர்கள் பல்வேறு துறைகளில் தேவையானவர்களாக இருக்கின்றனர்.

ஐந்தாம் தலைமுறை (5ஜி) தொலைத்தொடர்பு தொழில்நுட்பம் உலகெங்கிலும் பரவி வருகிறது. இது அதிவேக இணையம், குறைந்த தாமதம் மற்றும் அதிக இணைப்புத் திறனை வழங்குகிறது. 2030- ஆம் ஆண்டு ஆறாம்தலைமுறை (6ஜி) போன்ற மேம்பட்ட தொழில்நுட்பங்கள் வரவிருப்பதால், இந்தத் துறையில் புதிய கண்டுபிடிப்புகளுக்கும் வேலைவாய்ப்புகளுக்கும் அதிக வாய்ப்புகள் உள்ளன.

பங்களிப்பின் முக்கியத்துவம்... செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல்ஆகியவை மின்னணு சாதனங்கள் மற்றும் தகவல் தொடர்பு அமைப்புகளில் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன. இன்று இணைய பாதுகாப்பின் தேவையும் அதிகரித்து வருகிறது. தகவல் தொடர்பு அமைப்புகள் மற்றும் தரவுகளைப் பாதுகாப்பதில் நிபுணர்களின் பங்கு இன்றியமையாதது.

ஸ்மார்ட் ஹோம், ஸ்மார்ட் சிட்டி, தொழில்துறை தன்னியக்கம்போன்ற பல பிரிவுகளில் இந்த துறை சார்ந்த பொறியாளர்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. தானியங்கி அமைப்புகள் மற்றும் ரோபோக்களை வடிவமைத்தல் மற்றும் உருவாக்குதல், ஸ்மார்ட்போன்கள், கணினிகள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் பிற மின்னணு சாதனங்களின் வன்பொருளை வடிவமைத்தல் மற்றும் மேம்படுத்துதல், மின்னணு சாதனங்களிலிருந்து பெறப்படும் பெரிய அளவிலான தரவுகளைப் பகுப்பாய்வுசெய்தல், ஸ்மார்ட்போன்கள்பயன்பாடுகள் மற்றும் பிற தகவல் தொடர்பு தொடர்பான மென்பொருள்களை உருவாக்குதல்போன்ற பல பிரிவுகளில்இந்த பொறியாளர்களின் பங்கு முக்கியமானது.

பணி வாய்ப்புகள்...

மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியாளர்களுக்கான எதிர்கால வாய்ப்புகள் பரந்தளவில் உள்ளன. தொலைத்தொடர்பு நிறுவனங்கள், ஸ்மார்ட்போன் சாதனத் தயாரிப்பு நிறுவனங்கள், ஆட்டோமொபைல் துறை, இஸ்ரோ, டி.ஆர்.டி.ஓ, பி.இ.எல், இந்தியன் ரயில்வே, ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்போன்றஅரசுத் துறைகள், வங்கி மற்றும் நிதி துறைகள், ஆரோக்கியத் துறை, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ, ஹெச்.சி.எல் டெக்னாலஜிஸ் போன்றமென்பொருள் நிறுவனங்களில் பணிவாய்ப்புகள் உள்ளன.புதிய தொழில்நுட்பங்களை அடிப்படையாகக் கொண்ட ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் புதுமையான பணிகளில் ஈடுபட வாய்ப்புகள் உள்ளன.

அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில்மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் பட்டம் பெற்றவர்களுக்கு உலகளவில் நல்ல வேலை வாய்ப்புகள் உள்ளன. கூகுள், மைக்ரோசாப்ட், ஆப்பிள், அமேசான் போன்ற பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் வன்பொருள் மற்றும் மென்பொருள் மேம்பாடு, செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல் , தரவு அறிவியல் போன்ற பிரிவுகளில் வேலை வாய்ப்புகள் உள்ளன.டெஸ்லா, போஷ், கான்டினென்டல் போன்ற நிறுவனங்களில் எம்பெட்டெட்சிஸ்டம்ஸ் மற்றும் தானியங்கி வாகன தொழில்நுட்பம் தொடர்பான பணிகளில் வாய்ப்புகள் உள்ளன.புகழ்பெற்ற எம்.ஐ.டி, ஸ்டான்போர்ட் பன்னாட்டு பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபட வாய்ப்புகள் உள்ளன.

இந்த துறையில் ஆர்வத்துடனும், திறமையுடனும் கல்வியை தொடர்ந்து பயின்றால், உள்நாடு, அயல்நாடு என பரந்த தளத்தில் மாணவர்களுக்கு அதிகமான வேலைவாய்ப்புகள் கிடைக்கின்றன. அறிவாற்றலையும், ஆராய்ச்சி திறனையும் வளர்த்துக்கொண்டால், இத்துறையில் மாணவர்களுக்கு ஒரு பிரகாசமான எதிர்காலம் உறுதியாகக் காத்திருக்கிறது. மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் ஒரு சவாலான அதே நேரத்தில் மிகவும் சரியான படிப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.