வினா - விடை வங்கி... முந்தைய ஆண்டு வினாக்கள்! - 7

வினா - விடை வங்கி... முந்தைய ஆண்டு வினாக்கள்! - 7

முந்தைய ஆண்டு வினாக்கள் வினா - விடை வங்கி...
Published on
Q

1. பொருத்துக :

(a) ஆதரவு தேடுதலின் சின்னம் 1. குறுந்தொகை

(b) அன்பின் சின்னம் 2. அசோக மரத்தின் இலை

(c) காகம் ஒரு நல்ல

முன்னறிவிப்பான் 3.நற்றிணை

(d) பண்டில் விளையாட்டு

குறிப்பிடப்பட்டுள்ளது 4. வெள்ளை அல்லி மலர்

(a) (b) (c) (d)

(A) 3 4 1 2

(B) 2 4 1 3

(C) 4 2 1 3

(D) 1 4 3 2

Q

2. கில்ஜிகளின் கட்டிடம் பற்றிய பின்வரும் கூற்றுகளில் எது/எவை உண்மை?

(i) அலாவுதின் கில்ஜி அரியணை ஏறியபின் இந்து-முஸ்லிம் பாணி கட்டிடக் கலையில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கப்பட்டதாக கே.எஸ். லால் கூறுகிறார்.

(ii) ஹவுஸ்-இ-காஸ் இஸ்லாமிய கட்டிடக் கலையின் மிகவும் பொக்கிஷமான ரத்தினங்களில் ஒன்று என்று மார்ஷல் குறிப்பிடுகிறார்.

(iii) "அலாவுதின் கில்ஜியின் மசூதியின் நுழைவு வாயில் இந்தியாவில் இஸ்லாமிய கட்டிடக் கலையின் பரிணாம வளர்ச்சியில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது என்று பெர்சி பிரவுன் கூறுகிறார்".

(A) (i) மட்டும்

(B) (i) மற்றும் (ii) மட்டும்

(C) (i) மற்றும் (iii) மட்டும்

(D) (ii) மற்றும் (iii) மட்டும்

Q

3. பின்வருவனவற்றுள் எது தவறாக இணைக்கப்பட்டுள்ளது?

(i) கோபால நாயக் - திண்டுக்கல்

(ii) தூண்டாஜி வாக் - மதுரை

(iii) மருதுபாண்டியர்கள் - எட்டயபுரம்

(iv) புலித்தேவன் - நெற்கட்டாஞ்செவல்

(A) (i) மற்றும் (ii) மட்டும்

(B) (ii) மற்றும் (iii) மட்டும்

(C) (iii) மற்றும் (iv) மட்டும்

(D) (iv) மட்டும்

Q

4. பின்வரும் நிகழ்வுகளைக் கால வரிசைப்படி முறைப்படுத்துக.

(1) சட்ட மறுப்பு இயக்கம்

(2) சிப்பாய் கலகம்

(3) வேலூர் கலகம்

(4) தென்னிந்தியப் புரட்சி

(A) (2), (3), (1), (4)

(B) (1), (2), (4), (3)

(C) (4), (2), (3), (1)

(D) (4), (3), (2), (1)

Q

5. திருக்குறளில் யாருடைய கடமைகள் மறைமுகமாகக் கற்பிக்கப்படுகின்றன?

(A) ஆடவர்

(B) மகளிர்

(C) குடிமக்கள்

(D) அரசன்

Q

6. புத்தகங்களையும் ஆசிரியரின் பெயரையும் சரியாகப் பொருத்தவும் :

(a) திருக்குறள் உரைவளம் - 1. வ.செ. குழந்தை சாமி

(b) திருக்குறள் நுண்பொருள் மாலை - 2. கி.வா.ஜெகந்நாதன்

(c) திருக்குறள் ஆராய்ச்சிப் பதிப்பு - 3. காரிரத்தினக் கவிராயர்

(d) வாழும் வள்ளுவம் - 4. தண்டபாணி தேசிகர்

(a) (b) (c) (d)

(A) 4 3 2 1

(B)1 2 3 4

(C)4 2 1 3

(D)1 3 4 2

Q

7. உடையவர்கள் என்போர் எதை உடையவர் என்று வள்ளுவர் கூறுகிறார்?

(A) ஊக்கம் உடையோர்

(B) வீரம் உடையோர்

(C) செல்வம் உடையோர்

(D) கல்வி உடையோர்

Q

8. காலவரிசைப்படி பல்லவ மன்னர்களை வரிசைப்படுத்து:

1. சிம்மவிஷ்ணு - (555 - 590 СЕ)

2. மகேந்திரவர்மன் I - (590 - 630 СЕ)

3. நரசிம்மவர்மன் I - (630 - 668 СЕ)

4. ராஜசிம்மா - (695 - 728 СЕ)

(A) 1, 2, 3, 4

(B) 3, 1, 2, 4

(C) 4, 2, 3, 1

(D) 2, 4, 1, 3

Q

9. பொருத்துக:

(a) தலைச் சங்கப் புலவனார் தம்முள் 1. கம்பர்

(b) அகன் பொதியில் திருமுனிவன்

தமிழ்ச் சங்கம் 2. சேக்கிழார்

(c) கூடலினாய்ந்த ஒண்டீந் தமிழ் 3. திருஞானசம்பந்தர்

(d) மதுரைத் தொகையாக்கினான் 4. மாணிக்கவாசகர்

(a) (b) (c) (d)

(A) 2 3 1 4

(B) 3 4 2 1

(C) 1 3 4 2

(D) 2 1 4 3

Q

10. சங்ககால தமிழ்ச் சமூகத்தில் 'தோன்றுவன் மாதோ போர்க்களத்தானே'- என வீரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து பாடிய பெண்பால் புலவர் யார்?

(A) ஒக்கூர் மாசாத்தியார்

(B) காவல் பெண்டு

(C) வெள்ளிவீதியார்

(D) ஔவையார்

Q

11. உயிரினங்களில் கார்பன் கீழ்கண்ட எந்த பணி/பணிகளைச் செய்கிறது?

(1) இது கரிம மூலக்கூறுகளின் கட்டமைப்பு கூறாக செயல்படுகிறது.

(2) இது மற்ற அணுக்களுடன் எளிதில் பிணைப்புகளை ஏற்படுத்துகிறது.

(3) இது உயிர் மூலக்கூறுகள் (DNA, RNA) எடுக்கக்கூடிய வடிவம் மற்றும் செயல்பாட்டிற்கு நெகிழ்வு தன்மையை அளிக்கிறது.

(A) (1) மட்டும் சரி

(B) (2) மட்டும் சரி

(C) (3) மட்டும் சரி

(D) (1) (2) மற்றும் (3) சரி

Q

12. இவற்றில் ஒன்று தவறாக பொருத்தப்பட்டுள்ளது:

(1) டவுனின் குறைபாட்டு நோய் - 21 வது குரோமோசோமில்

ஏற்படும் ஆட்டோசோமல் டிரைசோமி

(2) ஹீமோபிலியா - பால் இணைந்த தலைமுறை

(3) கிளின்ஃபெல்டர் குறைபாட்டு நோய் - XO நிலை

(4) டர்னரின் குறைபாட்டு நோய் - வளர்ச்சி பின்னடைந்த மகளிர்

(A) (3) மட்டும்

(B) (1) மற்றும் (3) மட்டும்

(C) (2) மட்டும்

(D) (1) மற்றும் (2) மட்டும்

Q

13. கீழ்க்காணும் நிலையான வளர்ச்சி இலக்குகளைப் பட்டியல் I யை பட்டியல் II உடன் பொருத்துக:

பட்டியல் I பட்டியல் II

(a) நிலையான வளர்ச்சி இலக்கு - 6 1. நிலத்தில் வாழும் உயிரிகள்

(b) நிலையான வளர்ச்சி இலக்கு - 11

2. தண்ணீருக்கு

உள்ளே வாழும் உயிரிகள்

(c) நிலையான வளர்ச்சி இலக்கு -14

3. சுத்தமான நீர் மற்றும்

சுகாதாரம்

(d) நிலையான வளர்ச்சி இலக்கு -15 4. நிலையான நகர்புறங்கள்

மற்றும் சமூகங்கள்

(a) (b) (c) (d)

(A) 3 4 1 2

(B) 4 3 2 1

(C) 1 3 4 2

(D) 3 4 2 1

Q

14. மண் பற்றிய கூற்றில் சரியானவற்றை தேர்ந்தெடு :

(1) வட இந்திய சமவெளியின் மண் பெரும்பாலும் இமயமலை ஆறுகளால் படியவைக்கப்படுகிறது.

(2) கருப்பு மண் என்று பிரபலமாக அறியப்படும் மண்ணில் இரும்பு ஆக்சைடு அதிகம் உள்ளது.

(3) தக்காணப் பீடபூமியிலிருந்து உருவாகும் மண் வளமான மற்றும் அதிக ஈரப்பதத்தை தாங்கும் திறனுடையது.

(A) (1) மட்டும் சரியானது

(B) (1) மற்றும் (3) சரியானது

(C) (2) மற்றும் (3) சரியானது

(D) (1) மற்றும் (2) சரியானது

Q

15. கீழ்காண்பனவற்றுள் தீன்-இலாஹி பற்றிய உண்மையான கூற்று/கூற்றுகள் எவை?

(A) தீன்- இலாஹியை பின்பற்றியவர்கள் அதிகம்

(B) இது ஒரு அரசு மதம்

(C) முஸ்லீம்கள் மற்றும் இந்துக்கள் ஏற்றுக்கொள்ள கூடிய தேசிய மதமாக நிறுவ வேண்டும்

(D) பிரதேசங்களை விரிவுபடுத்துவதற்கும் சுதந்திர நாடுகளின் மீது கட்டுப்பாட்டைப் பெறுவதற்கும்

Q

16. சோழ அரசி வாணமாதேவி சதி மேற்கொண்டார் என்பதை வெளிப்படுத்தும் பட்டயம்

(A) அன்பில் பட்டயம்

(B) திருவாலங்காடு பட்டயம்

(C) பாகூர் பட்டயம்

(D) வேள்விக்குடி பட்டயம்

Q

17. சரியாகப் பொருந்தியுள்ளதைத் தேர்ந்திடுக:

(1) நிரந்தர நிலவரித் திட்டம் - கர்சன் பிரபு

(2) வங்கப் பிரிவினை - காரன்வாலிஸ்

(3) இரயத்துவாரி முறை - மன்றோ

(4) இருப்புப்பாதை இணைப்பு - டல்ஹௌசி

(A) (1) மற்றும் (3) சரி

(B) (1) மற்றும் (2) சரி

(C) (2) மற்றும் (3) சரி

(D) (3) மற்றும் (4) சரி

Q

18. பொருத்துக:

(a) பாரதியார் 1. பாண்டியன் பரிசு

(b) கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை 2. தமிழன் இதயம்

(c) பாரதிதாசன் 3. கண்ணன் பாட்டு

(d) இராமலிங்கம் பிள்ளை 4. ஆசிய ஜோதி

(a) (b) (c) (d)

(A) 3 2 1 4

(B) 4 3 1 2

(C) 3 4 1 2

(D) 2 3 4 1

Q

19. சரியான காலவரிசையில் அமைத்திடுக :

(1) இந்திய தேசிய இராணுவம் மீதான விசாரணை

(2) இந்திய தேசிய இராணுவம் தோற்றுவிக்கப்படுதல்

(3) இராயல் இந்திய விமானப்படை தோற்றுவிக்கப்படுதல்

(4) சி. இராஜகோபால ஆச்சாரி திட்டம்

(A) (4), (2), (1), (3)

(B) (2), (1), (3), (4)

(C) (3), (2), (4), (1)

(D) (1), (2), (3), (4)

Q

20. அடிப்படைக் கடமைகள் பற்றிய சரியானக் கூற்றினை/கூற்றுகளைத் தேர்ந்தெடு :

(1) இந்தியாவின் இறையாண்மை, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பது.

(2) இயற்கைச் சூழலை பாதுகாப்பது மற்றும் மேம்படுத்துவது.

(3) நம்முடைய பாரம்பரியங்களையும், பன்முகப் பண்பாட்டையும் பாதுகாப்பது.

(4) தனியார் உடைமைகளைப் பாதுகாப்பது.

(A) (1) மற்றும் (2) மட்டும்

(B) (2) மற்றும் (3) மட்டும்

(C) (1), (2) மற்றும் (3) மட்டும்

(D) (2), (3) மற்றும் (4) மட்டும்

Q

21. கீழ்வரும் கூற்று [A] மற்றும் காரணம் [R] ஆகியவற்றை பயன்படுத்தி சரியான விடையைத் தேர்ந்தெடுக்க :

கூற்று [A] இந்திய அரசமைப்புச் சட்டம் மிகவும் குறிப்பாக நீதிப்புனராய்வு அதிகாரத்தைக் குறிப்பிடுகிறது.

காரணம் [R]: நீதித்துறையானது தனது நீதிப்புனராய்வு அதிகாரத்தை அடுத்தடுத்தாண்டுகளில் விரிவாக்கிக் கொண்டது.

(A) [A] ஆனது சரி, ஆனால் [R] ஆனது தவறு

(B) [A] மற்றும் [R] ஆனது சரி; மற்றும் [R] ஆனது [A] ன் சரியான விளக்கம்

(C) [A] ஆனது தவறு, (R) ஆனது சரி

(D) [A] மற்றும் [R] ஆனது சரியானதாகும்; ஆனால் [R] ஆனது [A] க்கு சரியான விளக்கமல்ல

Q

22. முன்னுரிமை அட்டவணை வரிசையின்படி சரியான வரிசை ஒழுங்கினைக் கண்டறிக

(A) மத்திய அரசாங்கத்தின் இணை அமைச்சர்கள், மாநில முதலமைச்சர்கள் மக்களவை சபாநாயகர், துணை ஜனாதிபதி

(B) துணை ஜனாதிபதி, மக்களவை சபாநாயகர், மாநில முதலமைச்சர்கள், மத்திய அரசாங்கத்தின் இணை அமைச்சர்கள்

(C) துணை ஜனாதிபதி, மத்திய அரசாங்கத்தின் இணை அமைச்சர்கள், மக்களவை சபாநாயகர், மாநில முதலமைச்சர்கள்

(D) துணை ஜனாதிபதி, மக்களவை சபாநாயகர், மத்திய அரசாங்கத்தின் இணை அமைச்சர்கள், மாநில முதலமைச்சர்கள்

Q

23. கீழ்க்காண்பவற்றுள் பொருத்தமற்றது எது?

(A) S.R.பொம்மை வழக்கு (1994) - குடியரசுத் தலைவர் ஆட்சி

(B) உன்னிகிருஷ்ணன் வழக்கு (1993) - கல்வியுரிமை

(C) பிரகாஷ்சிங் வழக்கு (2006) - நீதித்துறைச் சீர்திருத்தம்

(D) M. நாகராஜ் வழக்கு (2006) - இட ஒதுக்கீடு

Q

24. "நாட்டின் அடிப்படைச் சட்டத்தின்படியே அன்றி எந்த ஒரு மனிதனும் கைது செய்யப்படவோ, சிறைப்படுத்தப்படவோ, நாடுகடத்தப்படுவதோ, அவரின் சொத்துக்களைக் கைப்பற்றவோ வேறு எந்த வகையிலோ அழிக்கப்பட முடியாது.

இந்த புகழ்பெற்ற வாசகம் அமைந்துள்ள ஆவணம்...

(A) உரிமைகள் சட்டம்

(B) உலகளாவிய மனித உரிமைப் பிரகடனம்

(C) மகாசாசனம்

(D) மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் 1993

Q

25. தேசிய கூட்டுறவு மேம்பாட்டு கழகம் (NCDC) பற்றிய கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

(1) இது ஓர் சட்டப்பூர்வ கழகம்

(2) இது ஓர் தன்னாட்சி நிறுவனமாகும்

(3) இன்று இதுவோர் பொது நிதி நிறுவனமாக இருக்கிறது

(4) இது வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகிறது

(A) (2) மற்றும் (3) மட்டும்

(B) (1) மற்றும் (3) மட்டும்

(C) (1) மற்றும் (4) மட்டும்

(D) (2) மற்றும் (4) மட்டும்

விடைகள்

1. (B) 2 4 1 3

2. (C) (i) மற்றும் (iii) மட்டும்

3. (B) (ii) மற்றும் (iii) மட்டும்

4. (D) (4), (3), (2), (1)

5. (B) மகளிர்

6. (A) 4 3 2 1

7. (A) ஊக்கம் உடையோர்

8. (A) 1, 2, 3, 4

9. (D) 2 1 4 3

10. (B) காவல் பெண்டு

11. (D) (1) (2) மற்றும் (3) சரி

12. (A) (3) மட்டும்

13. (D) 3 4 2 1

14. (B) (1) மற்றும் (3) சரியானது

15. (C) முஸ்லீம்கள் மற்றும் இந்துக்கள் ஏற்றுக்கொள்ள கூடிய தேசிய மதமாக நிறுவ வேண்டும்

16. (B) திருவாலங்காடு பட்டயம்

17. (D) (3) மற்றும் (4) சரி

18. (C) 3 4 1 2

19. (C) (3), (2), (4), (1)

20. (C) (1), (2) மற்றும் (3) மட்டும்

21. (C) [A] ஆனது தவறு, (R) ஆனது சரி

22. (B) துணை ஜனாதிபதி, மக்களவை சபாநாயகர், மாநில முதலமைச்சர்கள், மத்திய அரசாங்கத்தின் இணை அமைச்சர்கள்

23. (C) பிரகாஷ்சிங் வழக்கு (2006) - நீதித்துறைச் சீர்திருத்தம்

24. (C) மகாசாசனம்

25. (B) (1) மற்றும் (3) மட்டும்

வினா - விடை வங்கி... முந்தைய ஆண்டு வினாக்கள்! - 7
வினா - விடை வங்கி... முந்தைய ஆண்டு வினாக்கள்! - 6

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com