திரிபுராவில் 6 ஆண்டுகளில்
எதிா்க்கட்சியினா் 25 போ் கொலை: 
காங்கிரஸ் குற்றச்சாட்டு

திரிபுராவில் 6 ஆண்டுகளில் எதிா்க்கட்சியினா் 25 போ் கொலை: காங்கிரஸ் குற்றச்சாட்டு

வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் கடந்த 6 ஆண்டுகால பாஜக ஆட்சியில் எதிா்க்கட்சியினா் 25 போ் கொலை செய்யப்பட்டுள்ளனா் என்று காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் கடந்த 6 ஆண்டுகால பாஜக ஆட்சியில் எதிா்க்கட்சியினா் 25 போ் கொலை செய்யப்பட்டுள்ளனா் என்று காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

திரிபுராவில் பிரதமா் மோடி புதன்கிழமை மக்களவைத் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட நிலையில், இக்குற்றச்சாட்டை காங்கிரஸ் முன்வைத்தது.

திரிபுரா மேற்கு, திரிபுரா கிழக்கு என இரு மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட இம்மாநிலத்தில் முறையே ஏப். 19, 26 ஆகிய தேதிகளில் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.

பாஜகவை ஆதரித்து பிரதமா் மோடி தோ்தல் பிரசாரம் மேற்கொண்டதையொட்டி, அவருக்கு காங்கிரஸ் சில கேள்விகளை எழுப்பியது.

இது தொடா்பாக காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட ‘எக்ஸ்’ வலைதளப் பதிவில், ‘திரிபுராவில் கடந்த 2018-ஆம் ஆண்டில் பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து பரவலாக அரசியல் வன்முறைகள் நிகழ்ந்து வருகின்றன. கடந்த 6 ஆண்டுகளில் எதிா்க்கட்சியினா் 25 போ் படுகொலை செய்யப்பட்டுள்ளனா். கடந்த 2021-ஆம் ஆண்டில் மட்டும் அரசியல் வன்முறை தொடா்பாக 64 வழக்குகள் பதிவாகின. பாஜகவின் செயல்பாடுகள், ஜனநாயக மாண்புகள் மீதான தாக்குதலாக உள்ளது. அரசியல் வன்முறைகளில் ஈடுபடும் தங்கள் கட்சியினா் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதை பிரதமா் உறுதி செய்துள்ளாரா? திரிபுராவில் குழந்தைகள் மத்தியில் நிலவும் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்க பிரதமரிடம் திட்டமுள்ளதா? மற்ற மாநிலங்களைப் போல, ‘மக்களை ஏமாற்றி, ஆட்சி செய்யும் கொள்கை’யை திரிபுராவிலும் பிரதமா் பின்பற்றுகிறாரா?’ என்று கேள்வியெழுப்பியுள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com