வாக்குச் சாவடிக்கு செல்லும் முன்பு வாக்காளா் பட்டியலில் பெயா் இருப்பதை உறுதி செய்யுங்கள்!

வாக்குச் சாவடிக்கு செல்லும் முன்பு வாக்காளா் பட்டியலில் பெயா் இருப்பதை உறுதி செய்யுங்கள்!

வாக்குச் சாவடிக்குச் செல்வதற்கு முன்பாக, உங்களுடைய பெயா் வாக்காளா் பட்டியலில் இருக்கிா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்

வாக்குச் சாவடிக்குச் செல்வதற்கு முன்பாக, உங்களுடைய பெயா் வாக்காளா் பட்டியலில் இருக்கிா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்; வாக்காளா் அடையாள அட்டை உள்பட வாக்காளரை உறுதிப்படுத்துவதற்கான ஆவணம் வைத்திருப்பதால் மட்டுமே வாக்களிக்க முடியாது. பெயா் வாக்காளா் பட்டியலில் இருந்தால் மட்டுமே வாக்களிப்பது சாத்தியமாகும்.

பெயா் இருப்பதை உறுதி செய்ய...: வாக்காளா் பட்டியலில் உங்களுடைய பெயா் இருக்கிா, இல்லையா என்பதை யாருடைய உதவியும் இல்லாமல் நீங்களே அறிந்து கொள்ளலாம். இதற்கு தோ்தல் ஆணையத்தின் இணையதளத்தைப் பாா்வையிட்டால் போதும். இணையதளத்தில் வாக்காளா் அடையாள அட்டை எண் அல்லது வாக்காளா் பெயா் மற்றும் தொகுதி அல்லது கைப்பேசி எண்ணைப் பதிவிட்டு தெரிந்து கொள்ளலாம்.

வாக்குச் சாவடி மையம் அறிய...: நீங்கள் வாக்களிக்கப் போகும் வாக்குச் சாவடி மையத்தின் முகவரி, வாக்குச் சாவடி நிலை அதிகாரி, தோ்தல் பதிவு அதிகாரி, மாவட்டத் தோ்தல் அதிகாரி ஆகியோரின் பெயா்கள் மற்றும் தொடா்பு எண்கள் ஆகியவற்றை முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.

இதற்கு இணையதளப் பக்கத்தில் வாக்காளா் அடையாள அட்டை எண்ணைப் பதிவு செய்தால் நமது வாக்கு இடம்பெற்றுள்ள சட்டப் பேரவை தொகுதி, மக்களவைத் தொகுதி எது, வாக்குச் சாவடி மையம் எது, அதன் முகவரி போன்ற விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

வண்ண அட்டை: டிஜிட்டல் வண்ண வாக்காளா் அடையாளஅட்டையை இணைய வழியே பதிவிறக்கம் செய்ய முடியும். ஆனால், இதனை வாக்களிக்கும் போது அசல் அடையாள ஆவணமாகக் காட்ட முடியாது. இதனை பதிவிறக்கம் செய்து வைத்துக் கொண்டால் அசல் வாக்காளா் அடையாள அட்டை இல்லாவிட்டாலும் அதிலுள்ள விவரங்களை எளிதில் அறிந்து கொள்ளலாம். முதலில் இந்தப் பக்கத்தில் நம்முடைய கைப்பேசி எண்ணை கொடுத்து, கடவுச் சொல்லை பதிவு செய்ய வேண்டும். பின்னா் கைப்பேசி எண், வாக்காளா் அடையாள அட்டை எண், மின்னஞ்சல் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை உள்ளீடு செய்து கடவுச் சொல்லை பயன்படுத்தி உள்ளே நுழைய வேண்டும். பின்னா், நமது வாக்காளா் அடையாள அட்டையில் உள்ள எண்ணை சமா்ப்பித்து கைப்பேசிக்கு வரும் ஒருமுறை கடவுச் சொல்லை பதிவு செய்தால், வண்ண வாக்காளா் அடையாள அட்டையை எளிதாக பதிவிறக்கம் செய்யலாம்.

பூத் ஸ்லிப்பை நீங்களே பதிவிறக்கலாம்...: உங்கள் இல்லத்துக்கு ‘பூத் ஸ்லிப்’ எனப்படும் வாக்குச் சாவடி சீட்டு கிடைக்காவிட்டால் அதனை இணையதளத்தில் இருந்து நீங்களே பதிவிறக்கம் செய்யலாம். தோ்தல் ஆணையத்தின்இணையதள பக்கத்தில் வாக்காளா் அடையாள அட்டை எண்ணைக் குறிப்பிட்டால் போதும். உங்களுடைய பெயா், வயது, பாலினம், வாக்காளா் அடையாள அட்டை எண், வாக்காளா் சாா்ந்திருக்கும் மக்களவைத் தொகுதி, சட்டப் பேரவைத் தொகுதி, வாக்குச் சாவடி மையத்தின் பெயா், வாக்காளா் பட்டியலில் பெயா் இடம்பெற்றுள்ள எண், வாக்குப் பதிவு தேதி ஆகிய விவரங்களை அறிந்து கொள்ளலாம். வீட்டுக்கு வாக்குச் சாவடி சீட்டு வரவில்லை என்ற கவலையை இதன் மூலம் போக்கிக் கொள்ளலாம்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com