
மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், மாலை 5.30 மணி நிலவரப்படி 58 தொகுதிகளில் அதிகாரப்பூர்வ முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சூரத் மக்களவைத் தேர்தலில் ஏற்கெனவே போட்டியின்றி பாஜக வேட்பாளர் தேர்வு செய்யப்பட்ட நிலையில், தற்போது பாஜக 38, காங்கிரஸ் 11, வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
பாஜகவை சேர்ந்த பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, கிரண் ரிஜிஜு, அனுராக் தாக்குர், பிரஹலாத் ஜோஷி, கங்கனா ரணாவத், பசவராஜ் பொம்மை, சுரேஷ் கோபி, மஜத குமாரசாமி உள்ளிட்டோர் வெற்றி பெற்றுள்ளனர்.
மேலும், ஆலப்புழா மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் வெற்றி பெற்றுள்ளார்.
கட்சிவாரியாக வெற்றி விவரம்
பாஜக - 38
காங்கிரஸ் - 11
மதசார்பற்ற ஜனதா தளம் - 2
ஆம் ஆத்மி - 1
சிவசேனை(உத்தவ்) - 1
தேசியவாத காங்கிரஸ்(அஜித்) - 1
மதச்சார்பற்ற இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா - 1
மக்கள் குரல் கட்சி - 1
சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா - 1
கன்ஷி ராம் ஆசாத் சமாஜ் கட்சி - 1
இதற்கிடையே, பல்வேறு இடங்களில் வாக்கு எண்ணிக்கை மந்தமாக இருப்பதாகவும், முடிவுகள் வெளியிடுவதில் தாமதப்படுத்துவதாகவும் காங்கிரஸ் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
அதேபோல், மேற்கு வங்கத்தில் போட்டியிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் செளத்ரியை திரிணமூல் வேட்பாளர் யூசஃப் பதான் தோற்கடித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இருப்பினும், அதிகாரப்பூர்வ அறிவிப்பை தேர்தல் ஆணையம் இதுவரை வெளியிடவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.