
மக்களவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்தியளவில் தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது.
ஆனாலும், இந்தியா கூட்டணி வேட்பாளர்களும் குறைவான வாக்குகள் வித்தியாத்திலேயே பின்னடைவில் இருப்பதால், ஆட்சியைக் கைப்பற்றுவது யார்? என்னும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி 543 மக்களவைத் தொகுதிகளில் பாஜக தலைமையிலான கூட்டணி 288 தொகுதிகளிலும் காங்கிரஸின் இந்தியா கூட்டணி 237 தொகுதிகளிலும் முன்னிலையில் இருக்கின்றன.
அதேநேரம், 100 தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களுக்கும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கும் இடையே 1000 வாக்குகள் மட்டுமே வித்தியாசம் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால், அடுத்தடுத்த வாக்கு எண்ணிக்கையில் வெற்றி வாய்ப்புகள் மாறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.