
திருவள்ளூர் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் வெற்றி பெற்றார். அவர்தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளரை 5.72 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.
மக்களவைத் தேர்தலுக்கான வாக்குகள் எண்ணும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பெரும்பாலான இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. எனினும் தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி அனைத்துத் தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளது.
திருவள்ளூர் தொகுதியில் சசிகாந்த் செந்தில் 5,72,155 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவர் 7,96,956 வாக்குகளைப் பெற்றார். அவருக்கு அடுத்தபடியாக பாஜகவின் பாலகணபதி 2,24,801 வாக்குகளைப் பெற்றார்.
தேமுதிக வேட்பாளர் நல்ல தம்பி 2,23,904 வாக்குகளைப் பெற்றார்.
நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ஜெகதீஷ் சந்தர் 1,20,838 வாக்குகளைப் பெற்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.