சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

பாஜக கூட்டணியில் தேவநாதனுக்கு ஒரு தொகுதி!

இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகத்துக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :20 மார்ச் 2024, 12:41 pm

DIN

பாஜக - இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் இடையே மக்களவைத் தொகுதி ஒப்பந்தம் இன்று (மர்ச் 20) கையெழுத்தானது. அதன்படி இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகத்துக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தேவநாதனின் இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் இடம்பெற்றுள்ளது.

இந்த, இரு கட்சிகளுக்கு இடையிலான தொகுதிப் பங்கீடு இன்று நடைபெற்றது. தொகுதிப் பங்கீடு ஒப்பந்தத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும், இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக தலைவர் தேவநாதனும் கையெழுத்திட்டனர்.

டிடிவி தினகரனின் அமமுகவுக்கு 2 மக்களவைத் தொகுதிகளும், ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு ஒரு தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.