
மக்களவைத் தேர்தல் முடிவு வெளியான அடுத்த நாள் பாரதிய ஜனதா கட்சி சிதறிவிடும் என்று மகாராஷ்டிர முன்னாள் முதல்வரும், சிவசேனைக் (யுபிடி) கட்சித் தலைவருமான உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
நாசிக் மக்களவைத் தொகுதி வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட உத்தவ் தாக்கரே, கடந்த 2014 மற்றும் 2019 மக்களவைத் தேர்தல்களின்போது மோடிக்காக வாக்கு கேட்டதற்கு மக்களிடம் மன்னிப்பு கோரினார்.
மேலும் அவர் பேசியதாவது:
“காங்கிரஸுடன் எங்கள் கட்சி இணையும் என்று மோடி கூறியுள்ளார். பாஜகவுடன் 30 ஆண்டுகள் கூட்டணியின் இருந்தோம், ஆனால் கட்சியை இணைக்கவில்லை. ஜூன் 5 முதல் உங்களை முன்னாள் பிரதமராக்க நாட்டு மக்கள் முடிவெடுத்துவிட்டார்கள். அன்றைய நாளே உங்கள் கட்சி சிதறிவிடும்.
உங்களுக்கு பிறகு பாஜகவில் யார் இருக்கிறார்கள். நீங்கள் நீண்ட நாள் பிரதமராக இருக்க முடியாது. அதன்பிறகு உங்கள் கட்சியை முன்னெடுத்து செல்ல யாரும் இல்லை.” எனத் தெரிவித்தார்.
நீங்கள் 75 வயதை நிறைவு செய்த பிறகும் பொறுப்பில் இருப்பீர்களா? அல்லது அந்த விதிமுறைகள் எல்லாம் குறிப்பிட்ட சில தலைவர்களுக்கு மட்டும்தானா? என்று மோடிக்கு கேள்வி எழுப்பினார்.
மேலும், தெலங்கானா பிரசாரத்தின்போது உத்தவ் தாக்கரேவை போலிக் குழந்தை என்று மோடி விமர்சித்ததை சுட்டிக்காட்டி, “நீங்கள் எனக்கு பிறப்புச் சான்றிதழ் தரத் தேவையில்லை. நீங்கள் அதற்கு தகுதியானவரும் இல்லை. நீங்கள் பிரம்மாவின் மறுபிறவி கிடையாது.” என்று பதிலடி கொடுத்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.