காந்தி குடும்பத்தின் 4 தலைமுறையும் அரசியலமைப்பை அவமதித்துள்ளது: மோடி

நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி மற்றும் ராகுல் காந்தி மீது பிரதமர் மோடி குற்றச்சாட்டு.
காந்தி குடும்பத்தின் 4 தலைமுறையும் அரசியலமைப்பை அவமதித்துள்ளது: மோடி
Published on
Updated on
1 min read

இந்திய அரசியலமைப்பை காந்தி குடும்பத்தின் 4 தலைமுறையினரும் அவமதித்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

முன்னாள் பிரதமர்கள் ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் அவர்களின் சொந்த அரசியல் இலக்குக்காக இந்திய அரசியலமைப்பை அவமதித்ததாக டிடி நியூஸுக்கு அளித்த நேர்க்காணலில் தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், டிடி நியூஸ் சேனலின் நேர்க்காணல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசியுள்ளார்.

அப்போது, பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்திய அரசியலமைப்பை மாற்றிவிடுவார்கள் என்று காங்கிரஸின் தொடர்ச்சியான குற்றச்சாட்டு குறித்து கேள்வி முன்வைக்கப்பட்டது.

காந்தி குடும்பத்தின் 4 தலைமுறையும் அரசியலமைப்பை அவமதித்துள்ளது: மோடி
ஈரான் அதிபர் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்

அதற்கு பதிலளித்த மோடி, “அரசியலமைப்புடன் முதலில் விளையாடியது இந்தக் குடும்பம்தான். பேச்சு சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் முதல் திருத்தத்தை கொண்டு வந்தவர் நேரு. அவரது மகள் இந்திரா காந்தி, நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்யவும், பதவியை காப்பாற்றவும் அவசரநிலை பிரகடனம் செய்தார். பின்னர் அவரது மகன் ராஜீவ் காந்தி, ஷா பானோவின் ரத்து செய்து அரசியலமைப்பை மாற்றினார். ஊடகங்களை கட்டுப்படுத்த சட்டத்தை கொண்டுவந்தார்.” எனத் தெரிவித்தார்.

மேலும், “கடந்த 2013-ஆம் ஆண்டு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த சட்டமசோதாவின் நகலை ராகுல் காந்தி அனைவரின் முன்னிலையிலும் கிழித்தார், தொடர்ந்து, அமைச்சரவையும் அதனை திரும்பப் பெற்றுக் கொண்டது.” என்று மோடி தெரிவித்தார்.

தொடர்ந்து, பேசிய மோடி, “டீ விற்பனை செய்தவர் பிரமராகும் வாய்ப்பை வழங்கிய அரசியல் சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கர் மீதும், அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்கள் மீதும் எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. இதுவே நமது ஜனநாயகத்தின் சக்தி. அரசியலமைப்புச் சட்டத்தை நான் நீண்ட காலமாக கொண்டாடி வருகிறேன்.” எனத் தெரிவித்தார்.

உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரம், பிகார், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் இன்று ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com