மஜத - காங்கிரஸ் இடையே ‘ஒக்கலிகர்’ அரசியல்

மஜத - காங்கிரஸ் இடையே 
‘ஒக்கலிகர்’ அரசியல்



கர்நாடக அரசியல் களத்தில் லிங்காயத்து, ஒக்கலிகர் சமுதாயங்களுக்கு இடையே முன்களப்போட்டி காணப்படுவது வழக்கமாக உள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலோ, மக்களவைத் தேர்தலோ, எதுவாக இருந்தாலும் லிங்காயத்து, ஓக்கலிகர் சமுதாயத்தினருக்கு அளிக்கப்பட்டுள்ள பிரதிநிதித்துவம் கூர்ந்து கவனிக்க படுகிறது.

மாநில மக்கள்தொகையில் லிங்காயத்து சமூகத்தினர் சுமார் 18% பேர்; ஒக்கலிக சமூகத்தைச் சேர்ந்தவர்கள் சுமார் 15% பேர் உள்ளனர். வடகர்நாடகத்தில் லிங்காயத்துகளும் தென் கர்நாடகத்தில் ஒக்கலிகர்களும் பெரும்பான் மையாக உள்ளனர்.

1990-ஆம் ஆண்டுவரை இரு சமூகத்தினரின் ஆதரவை காங்கிரஸ் கட்சி பெற்று வந்தது. 1990-களில் எடியூரப்பாவின் எழுச்சிக்குப் பிறகு, பாஜகவின் வாக்கு வங்கியாக லிங்காயத்துகள் மாறிவிட்டனர்.

அதே நேரத்தில், ஒக்கலிகர் சமு *தாயம் 1996-க்குப் பிறகு காங்கிரஸ் ஆதரவில் இருந்து விலகி எச்.டி. தேவெ கெளடா தலைமையிலான ஜன தாதளம், அதைத் தொடர்ந்து மதச்சார்பற்ற ஜனதாதளத்திற்கு மாறியது.

இந்த ஆதரவு அவரது மகன் எச்.டி.குமாரசாமிக்கும் தொடர்ந்தது. ஆனால், காங்கிரஸ் கட்சியில் டி.கே.சிவகுமாரின் எழுச்சிக்குப் பிறகு ஒக்கலிகர்கள் காங்கிரஸ் பக்கம் சாயத் தொடங்கினர். ஒக்கலிகர்களின் ஆதரவை முழுமையாக பெற முடியாத காரணத்தால், தனிப் பெரும்பான்மை பலத்துடன் கர்நாடகத்தில் ஆட்சி அமைக்க முடியாமல் பாஜக தவித்து வருகிறது.

2008-இல் 110 இடங்களில் வென்ற பாஜக, தனிப்பெரும் கட்சியாக வென்றதே தவிர, ஆட்சி அமைப்பதற்கான தனிப் பெரும்பான்மை பெறவில்லை. ஆனாலும், சுயேச்சைகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது.

2018-இல் 104 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தபோதும், பாஜகவால் ஆட்சி அமைக்க முடியவில்லை. எனவே, ஒக்கலிகர்கள் பெருவாரியாக வாழும் பழைய மைசூரு பகுதியில் ஒக்கலிகர் சமுதாயத்தைச் சேர்ந்த அஸ்வத் நாராயணா, ஆர்.அசோக், சி.டி.ரவி, பிர தாப் சிம்ஹா, நாராயண கௌடா போன்ற தலைவர்களை பாஜக வளர்த்தது. என்றபோதும், எச்.டி.குமாரசாமியின் மஜதவுக்குத்தான் பெரும்பாலான ஒக்கலிகர்கள் ஆதரவு அளித்தனர். இந்த நிலையில், மக்களவைத் தேர்தலில் மஜதவுடன் பாஜக கூட்டணி அமைத்துப் போட்டியிடுகிறது. இந்தக் கூட்டணியால் ஒக்கலிகர்களின் வாக்குகளை முழுமையாக வென்றெடுக்க முடியும் என்று பாஜக கருதுகிறது. ஒக்கலிகர்களிடையே யாருக்கு அதிக செல்வாக்கு என்ற போட்டி எச்.டி.குமாரசாமி, டி.கே.சிவகுமார் இடையே தீவிரமடைந்துள்ளது.

பழைய மைசூரு பகுதியில் பாஜக வேட்பாளர்களின் வெற்றிக்கு ஒக் கலிகர்களின் வாக்குகளை பெற் றுத் தர குமாரசாமி கடுமை யாக பாடுபட்டு வரு கிறார். அதன்பொருட்டே, ஒக்கலிகர்களின் மடமாக திகழும் ஆதிகன்சுனகிரி மடத்திற்கு பாஜக, மஜத வேட்பாளர்களை அழைத்துச் சென்ற குமாரசாமி, அங்கு பீடாதிபதி நிர்மலானந்த நாத சுவாமிகளின் ஆசியைப் பெற்றுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த காங்கிரஸ், ஒக்கலிகர்களின் ஆதரவைப் பெற தீவிர முயற்சியில் இறங்கியது.

காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 28 தொகுதிகளில் 8 தொகுதிகளை ஒக்கலிகர்களுக்கு வழங்கியுள்ளதாக டி.கே.சிவகுமார் அறிவித்துள்ளார்.

தென் கர்நாடகத்தைச் சேர்ந்த உடுப்பி, ஹாசன், தென்கன்னடம், தும்கூரு, மண்டியா, மைசூரு, சாமராஜ்நகர், பெங்களூரு ஊரகம், பெங்களூரு வடக்கு, பெங்களூரு தெற்கு, சிக்பளாப்பூர், கோலார் ஆகிய 12 தொகுதிகளில் ஒக்கலிகர்களின் செல்வாக்கு அதிகமாகக் காணப்படுகிறது.

இதில் மண்டியா தொகுதியில் எச்.டி.கு மாரசாமி போட்டியிடுகிறார். பெங்களூரு ஊரகத் தொகுதியில் டி.கே.சிவகுமாரின் தம்பி டி.கே.சுரேஷ் களமிறங்கியுள்ளார்.

ஒக்கலிகர்களின் முழு ஆதரவைப் பெற்று வெற்றியை உறுதி செய்யும் நோக் கத்துடன் மஜத, காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com