இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

பெரம்பூர் டூ விருகம்பாக்கம்! ஒரே நாளில் 5 தொகுதிகள்! மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!

மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளது பற்றி...

TVK president Vijay

தவெக தலைவர் விஜய் - கோப்புப்படம்

Published On :26 மார்ச் 2026, 10:34 am IST

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நாளை மறுநாள் (மார்ச் 28) பிரசாரத்தை தொடங்கவுள்ள நிலையில், ஒரே நாளில் 5 தொகுதிகளுக்குச் செல்லத் திட்டமிட்டுள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 23 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் இடையே நான்கு முனைப் போட்டி நிலவுகிறது.

முதல்முறையாக தேர்தலில் களமிறங்கும் விஜய்யின் தவெக தனித்துப் போட்டியிடும் நிலையில், புதுச்சேரி சட்டப்பேரவைகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இன்னும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியலை தவெக அறிவிக்கவில்லை.

இந்த நிலையில், நாளை மறுநாள் முதல் விஜய் பிரசாரத்தை தொடங்க திட்டமிட்டிருக்கும் நிலையில், நாளை இரவுக்குள் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலாவது வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தவெக தரப்பில் சென்னையில் ஒரே நாளில் 10-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் விஜய் பிரசாரம் செய்ய காவல் ஆணையரிடம் மனு அளிக்கப்பட்ட நிலையில், அனுமதி மறுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனைத் தொடர்ந்து, சென்னையில் மார்ச் 28 ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை 5 தொகுதிகளில் பிரசாரம் மேற்கொள்ள உரிய பாதுகாப்பு வழங்க சென்னை காவல் ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, விஜய் போட்டியிடவுள்ளதாக கூறப்படும் பெரம்பூரில் காலை 10 மணி, முதல்வரின் கொளத்தூரில் பகல் 1 மணி, வில்லிவாக்கம் பகல் 2 மணி, அண்ணா நகர் பிற்பகல் 3 மணி, விருகம்பாக்கம் மாலை 4 மணிக்கு அனுமதி கோரப்பட்டுள்ளது.

ஒவ்வொரு கூட்டத்திலும் 3,000 பேர் பங்கேற்பார்கள் என்றும், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வண்ணம் பாதுகாப்பு வழங்கவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

5 constituencies in one day! Vijay campaigning from March 28th!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.