தவெகவின் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தில் இளைஞர்களுக்கான சிறப்பு தேர்தல் வாக்குறுதிகளும் வெளியிடப்பட்டன.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 23 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் இடையே நான்கு முனைப் போட்டி நிலவுகிறது. ஆளும் திமுகவும், எதிர்க்கட்சியான அதிமுகவும் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றன.
புதுவரவான விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளது. முதல்முறை தேர்தலில் களமிறங்கும் விஜய்யின் தவெக தனித்துப் போட்டியிடும் நிலையில், தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான 234 வேட்பாளர்களை அதன் தலைவர் விஜய் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை அறிமுகம் செய்து வைத்தார்.
அதில், சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் தான் போட்டியிடப் போவதாகவும் அவர் அறிவித்துள்ளார். தேர்தலில் தவெக சார்பில் 23 பெண் வேட்பாளர்களும் களமிறக்கப்பட்டுள்ளனர். மேலும் தூத்துக்குடி தவெக வேட்பாளராக விஜய்யின் நண்பர் ஸ்ரீநாத் அறிவிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக தவெகவில் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தில் இளைஞர்களுக்கான சிறப்பு தேர்தல் வாக்குறுதிகளையும் விஜய் வெளியிட்டார்.
• மாநில முழுவதும் உள்ள அனைத்துப் பள்ளி, கல்லூரிகளில் போதைப் பொருள் எதிர்ப்பு மன்றங்கள் நிறுவப்படும்
• கல்வி உத்தரவாதத் திட்டம் - 12 ஆம் வகுப்பிலிருந்து பிஎச்டி வரையில் கல்வி பயில ரூ. 20 லட்சம் வரையில் பிணையில்லா கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
• அனைத்து மாநில அரசுப் பணியிடங்களுக்கும் ஆட்சேர்ப்பு நடத்த நிலையான கால அட்டவணை - அரசுப் பணிகளில் 365 நாள்களில் பணியமர்த்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
• வேலைவாய்ப்பு தாமத சூழல் நிதியுதவி - 29 ஆவது வயதுக்குப் பிறகும் வேலைவாய்ப்பு கிடைப்பதில் தாமதமாகும் சூழல் ஏற்படுமானால், பட்டதாரி இளைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ. 4,000 மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கு மாதம் ரூ. 2,500 இளைஞர் நல நிதியாக வழங்கப்படும்.
• வெற்றித் தொழிற்பயிற்சி உத்தரவாதம் - ஆண்டுதோறும் 5 லட்சம் இன்டர்ன்ஷிப் பயிற்சிகளை வழங்க தனியார், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுடன் அரசு இணைந்து செயல்படும். அதன்படி, பட்டதாரிகளுக்கு மாதம் ரூ. 10,000 மற்றும் ஐடிஐ, டிப்ளமோ படித்தவர்களுக்கு ரூ. 8,000 மாநில அரசே வழங்கும்.
• வெற்றி தொழில் முனைவோர் திட்டம் - தொழில் முனைவோரை உருவாக்க 25 லட்சம் வரை பிணையில்லா கடன் வழங்கப்படும்.
• நமது ஊரில் நமக்கே வேலைவாய்ப்பு திட்டம்- தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பு என்பதை உறுதி செய்வதே நமது அரசின் நோக்கமாகும். அதன்படி தனது பணியாளர்களில் 75 சதவிகிதம் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் இருந்தால், அந்த தனியார் நிறுவனங்களுக்கு மாநில ஜிஎஸ்டி 2.5 சதவிகிதம் மானியம், 5 சதவிகிதம் மின் கட்டணம் மானியம் கொடுக்கப்படும் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகள் இடம்பெற்றிருந்தன.
Summary
Special election promises for the youth were also announced at the TVK candidate introduction meeting.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஒரு வாக்கில் வெற்றி பெற்ற தவெக எம்எல்ஏ! நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்கத் தடை!

மாதவரம் தொகுதி: 86 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தவெக முன்னிலை!

உண்மையில் பிரசாரங்கள் மக்களிடையே எடுபடுகிறதா? தவிப்பில் தவெக வேட்பாளர்கள்!

தவெக வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் ஒத்திவைப்பு?
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு
