அதிமுக -பாஜக கூட்டணி அமைய அச்சாணியாக இருந்ததோடு, கூட்டணிக்கு பல்வேறு கட்சிகளைக் கொண்டு வந்தது, தொகுதிப் பங்கீட்டை எவ்வித கருத்து வேறுபாடும் இன்றி இறுதி செய்தது என பேரவைத் தேர்தலுக்கான கூட்டணியின் அடுத்தடுத்த நகர்வுகளில் முக்கியப் பங்காற்றியவர் பியூஷ் கோயல். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் பிரசாரத்தை நிறைவு செய்திருக்கும் அவர், தினமணிக்கு அளித்த சிறப்பு நேர்காணல்:
தொகுதி மறுசீரமைப்பு மசோதா தோல்வியடைந்ததை திமுக சாதனையாக கூறி வருகிறதே...
தென் மாநிலங்களில் மக்கள் தொகை குறைவாக உள்ளதால் தொகுதிகளின் எண்ணிக்கையும் குறையும் அபாயம் எழுந்தது. அதனால் அனைத்து மாநிலங்களின் தொகுதிகளின் எண்ணிக்கையும் 50 % அதிகரிக்கப்பட்டது. இதில் கூடுதலாக 273 தொகுதிகள் பெண்களுக்கு ஒதுக்கப்படும். 54 கோடி மக்களுக்கான 543 தொகுதிகளை 140 கோடி மக்கள் தொகைக்கு 800 -க்கும் மேல் அதிகரிக்க வேண்டும். தமிழகத்துக்கு 59 தொகுதிகள் கிடைக்கும். திமுக பொய்யான பிரசாரத்தை முன்னெடுத்துள்ளது.
வலிமையாக இருப்பது காங்கிரஸ் -திமுக கூட்டணியா, பாஜக -அதிமுக கூட்டணியா?
எங்கள் கூட்டணியில் எந்தவித முணுமுணுப்போ, பிரச்னையோ இல்லாமல் கூட்டணிப் பேச்சுவார்த்தை முடிந்தது. திமுக கூட்டமியில் காங்கிரஸ், இடதுசாரிகள் பிடிவாதம் பிடித்ததையும், தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நிலவியதையும் உலகம் அறியும். காங்கிரஸ் -திமுக இடையேயான உள்கட்சி சண்டையால் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தியும் முதல்வர் ஸ்டாலினும் ஒரே மேடையில் பிரசாரம் செய்யவில்லை. கூட்டணியில் 27 இடங்களைப் பெற்ற பாஜகவுக்காக பிரதமர் மோடி 5 முறை பிரசாரத்துக்கு வந்தார். ஆனால், ராகுல் காந்தி ஒரு முறை மட்டுமே தமிழகம் வந்தார். இதுலிருந்து எந்தக் கூட்டணி இணக்கமாகவும் வலிமையானதாகவும் இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
தமிழக பேரவைத் தேர்தலில் திராவிடக் கட்சிகளைப் போலவே இலவச திட்டங்களை பாஜக வாக்குறுதி அளித்துள்ளதே?
இலவசங்களுக்கும், மக்களுக்கான திட்டங்களுக்கும் வித்தியாசம் உள்ளது. 4 கோடி ஏழைகளுக்கு வீடுகள் கட்டித் தருவதும், இலவசமாக கழிப்பறை வசதி செய்து தருவதும் மக்களின் வாழ்வின் தரத்தை மேம்படுத்தும் அவற்றை இலவசமாகப் பார்க்கக் கூடாது.
விஜய்க்கு பெரும்பாலான இளைஞர்கள், பெண்கள் கூட்டம் கூடுவது தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பாதிப்பை ஏற்படுத்ததா?
விஜய்க்கு தைரியமிருந்தால் அவர் கடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டிருக்க வேண்டும். அவருக்கு கூடும் கூட்டம் ரசிகர்களா, தொண்டர்களா என பார்க்க வேண்டும். ரசிகர்கள் எப்போதும் தொண்டர்களாக மாறி வாக்களிக்க மாட்டார்கள் . நடிகர் சிவாஜிக்கும், விஜயகாந்த்துக்கும் கூட்டம் கூடியது. நடிகர் கமலஹாசன் பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வானதி சீனிவாசனிடம் தோற்றார். விஜய்க்கு கிடைக்கும் வாக்குகள் திமுக கூட்டணியைதான் பாதிக்கும். தேசிய ஜனநாயக் கூட்டணிக்கு பாதிப்பு ஏற்படாது.
தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஏன் தமிழக மக்கள் வாக்களிக்க வேண்டும்?
முதல்வர் ஜெயலலிதா பதவிக் காலத்தில் தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பாக இருந்தனர். ஆனால் தற்போது இல்லை. இதேபோல், பிரதமர் மோடி முத்தலாக் சட்டம் மூலம் பெண்களின் உரிமையை பாதுகாத்தார். திமுக - காங்கிரஸ் கூட்டணி பெண்களுக்கு எதிரான கூட்டணியாக உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி பெண்கள், விவசாயிகள், மீனவர்கள் உள்பட அனைவரின் பாதுகாப்பையும் உறுதிப் படுத்தும்.
நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தல் தில்லிக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையேயான போட்டி என்று முதல்வர் மு.க.ஸ்டாலின்முன்னிருத்தியிருப்பதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
இந்தியா என்பது ஒரே தேசம். ஆனால் தேசத்தை வடக்கு, தெற்கு என திமுக பிரிக்கிறது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தமிழகத்துக்கும் தில்லிக்கும் இடையேயானது என நாட்டின் ஒற்றுமைக்கு எதிராக திமுக கூறுவதை தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
தமிழக தேர்தல் களம் யாருக்கு சாதகமாக உள்ளது?
தேசிய ஜனநாயகக் கூட்டணி மூன்றில் இரண்டுபங்கு பெரும்பான்மையைப் பெறும். திமுக குடும்ப ஆட்சியால் தமிழகத்தில் ஊழல் பெருகி விட்டதே இதற்கு காரணமாகும். மக்கள் ஊழலாலும், சட்டம் ஒழுங்கு பிரச்னையாலும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக் கூட்டணிக்குத்தான் சாதகமாக இருக்கிறது. இந்தத் தேர்தலில் திமுகவின் குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டப்படும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழக மக்களைத் தவறாக வழிநடத்துகிறார் ஸ்டாலின்! பியூஷ் கோயல்
“குற்றவாளி கூண்டில் ஸ்டாலின் அரசு” - திமுக அரசின் ஊழல் பட்டியலை வெளியிட்ட பாஜக !

விஜய் கனவுலகில் இருக்கிறார்; அவருக்கு எந்த புரிதலும் இல்லை: பியூஷ் கோயல் பேட்டி

சென்னையில் பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல்
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


