மாற்றப்பட்ட இரட்டை வேட்பாளர் முறை

1952 மற்றும் 1957-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலின் போது இரட்டை வேட்பாளர் தொகுதிகள் நடைமுறையில் இருந்தன. 
மாற்றப்பட்ட இரட்டை வேட்பாளர் முறை (கோப்புப்படம்)
மாற்றப்பட்ட இரட்டை வேட்பாளர் முறை (கோப்புப்படம்)


1952 மற்றும் 1957-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலின் போது இரட்டை வேட்பாளர் முறை நடைமுறையில் இருந்தன. 

இரட்டை வேட்பாளர் தொகுதிகளில் இரண்டு வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஒருவர் பின்தங்கிய பிரிவைச் சேர்ந்தவராகவும், ஒரு வேட்பாளர் பொதுப் பிரிவைச் சேர்ந்தவராகவும் இருப்பார்.

அதன்படி, இந்த தொகுதியைச் சேர்ந்த வாக்காளர்கள், வாக்குப்பதிவின் போது இரண்டு வாக்குகளை இரண்டுப் பிரிவைச் சேர்ந்த வேட்பாளர்களுக்குச் செலுத்த வேண்டும்.

இந்த இரட்டை வேட்பாளர் தொகுதிகள் 1961-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தின்படி நீக்கப்பட்டது. அதன்பிறகு, தனித் தொகுதிகள் இன்றைக்கு உள்ளபடி மாறின. 

அதாவது, பொது உறுப்பினர் ஒருவர், தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவர் என்று இரு உறுப்பினர்கள் அல்லாமல், தனித் தொகுதிகளில் தாழ்த்தப்பட்டவர்கள் மட்டுமே தேர்தலில் போட்டியிட முடியும் என்ற நிலை உருவானது. அனைத்துத் தரப்பினரும் அவர்களில் ஒருவரையே தேர்வு செய்யும் முறை நடைமுறைக்கு வந்தது.

1952-இல் தமிழகத்தில் இருந்த இரட்டை வேட்பாளர் தொகுதிகள்..

1. அதிராம்பட்டினம்
2. சிதம்பரம்
3. குடியாத்தம்
4. அரூர்
5. ஜெயங்கொண்டம்
6. கரூர்
7. மதுராந்தகம்
8. மன்னார்குடி
9. மாயூரம்
10. மேலூர்
11. முதுகுளத்தூர்
12. நாகப்பட்டினம்
13. நம்பியூர்
14. நன்னிலம்
15. நிலக்கோட்டை
16. நீலகிரி
17. பெரம்பலூர்
18. பெரியகுளம்
19. பொள்ளாச்சி
20. பொன்னேரி
21. சைதாப்பேட்டை
22. சங்கரநயினார்கோயில்
23.  ஸ்ரீவில்லிபுத்தூர்
24. தஞ்சாவூர்
25. ஆயிரம்விளக்கு
26. திண்டிவனம்
27. திருச்செந்தூர்
28. திருச்செங்கோடு
29. திருக்கோவிலூர்
30. திருமயம்
31. திருநெல்வேலி
32. திருப்பூர்
33. திருவள்ளூர்
34. திருவண்ணாமலை
35. வந்தவாசி
36. வேலூர்
37. விருத்தாச்சலம்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com