இந்த தொகுதிகளுக்கெல்லாம் ஒரு சிறப்பு
By DIN | Published On : 12th March 2021 02:53 PM | Last Updated : 12th March 2021 02:53 PM | அ+அ அ- |

இந்த தொகுதிகளுக்கெல்லாம் ஒரு சிறப்பு
தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளிலும் சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.
முக்கிய அரசியல் கட்சிகளும், அதன் கூட்டணிக் கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து வருகிறது. அதேவேளையில் தமிழகம் முழுவதும் மார்ச் 12-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் சில தொகுதிகள் சில விஷயங்களில் தனிக்கவனம் பெறுகின்றன.
அந்த வகையில் தனித் தொகுதி இல்லாத மாவட்டங்களாக..
1. திருப்பத்தூர்
2. அரியலூர்
3. கன்னியாகுமரி
குறைந்தபட்சமாக இரண்டு தொகுதிகளைக் கொண்ட மாவட்டங்களாக..
1. பெரம்பலூர்
2. அரியலூர் ஆகியவை உள்ளன.
அதிகபட்சமாக 16 தொகுதிகளைக் கொண்ட மாவட்டமாக சென்னை விளங்குகிறது.