ஐடிஐ படித்தவர்களுக்கு சேலம் இரும்பு ஆலையில் பயிற்சியுடன் பணி

பொதுத்துறை நிறுவனமான Steel Authority of India Limited(SAIL) -ன் கீழ் செயல்படும் சேலம் இரும்பு ஆலையில் ஊக்கத்தொகையுடன் 2 ஆண்டுகள் பயிற்சி பெற்று பின்னர் பணியில் சேர தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்
Published on
Updated on
1 min read

பொதுத்துறை நிறுவனமான Steel Authority of India Limited(SAIL) -ன் கீழ் செயல்படும் சேலம் இரும்பு ஆலையில் ஊக்கத்தொகையுடன் 2 ஆண்டுகள் பயிற்சி பெற்று பின்னர் பணியில் சேர தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலைவாய்ப்பு எண்: 2/2012

பணி: Attendant-cum-Technician Trainee

மொத்த காலியிடங்கள்: 54

துறையும் துறைவாரியான காலியிடங்களும்:

பிட்டர் - 26

எலக்ட்ரீஷியன் - 20

வெல்டர் - 8

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு, +2 முடித்து சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்: 01.07.2012 தேதிப்படி 28 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வு நடத்தப்படும். இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு மருத்துவ சோதனை நடத்தப்படும்.

தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு 2 வருடம் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியின்போது முதல் வருடத்தில் மாதம் ரூ.6,600, இரண்டாம் வருடத்தில் மாதம் ரூ.7,700 சம்பளமாக வழங்கப்படும்.

வயிற்சியை வெற்றிகரமாக முடிப்பவர்களுக்கு எஸ்1 கிரேடு அந்தஸ்தில் ரூ.8.630 - 3% - 12,080 மற்றும் இதர படிகளுடன் நிரந்தர சம்பளத்தில் அமர்த்தப்படுவர்.

விண்ணப்ப கட்டணம்: ரூ.150. SC/ST/ மாற்றுதிறனாளிகளுக்கு ரூ.50 மட்டும். கட்டணத்தை SAIL -A?C Salem Steel Plant பெயரில் SBI, Salem Steel Plant Campus கிளையில் மாற்றத்தக்க வகையில்  A/C payee டி.டி,யாக எடுத்து அனுப்ப வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் தெரிந்துகொள்ள www.sail.shine.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 10.09.2012

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com