சென்னை, பிப். 21: வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை இணையதளத்தில் மேற்கொண்டவர்கள், அதில் திருத்தங்கள் மேற்கொள்ள உரிய சான்றுகளுடன் அலுவலகத்தை அணுக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
வேலைவாய்ப்பு அலுவலகங்களில் புதிய பதிவு, பதிவைப் புதுப்பித்தல் மற்றும் கூடுதல் கல்வித் தகுதியைப் பதிவு செய்தல் போன்ற பணிகள் அனைத்தும் இப்போது இணையதளம் ( http://tnvelaivaaippu.gov.in) வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வேலைவாய்ப்பு அலுவலகங்களில் முன்பே பதிவு செய்து அடையாள அட்டை
பெற்றுள்ளவர்கள், புதுப்பித்தல் மற்றும் கூடுதல் கல்வித் தகுதியைப் பதிவு செய்வதுடன் மட்டுமல்லாமல், தங்களின் பதிவு விவரங்களையும் இணையதளம் வாயிலாகச் சரிபார்த்துக் கொள்ளலாம். பதிவுதாரர்கள் தங்களின் பதிவு விவரங்களில் ஏதேனும் திருத்தம் தேவை இருப்பின் அதனைச் சரிசெய்து கொள்ள உரிய சான்றுகளுடன் தாங்கள் பதிவு செய்துள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தை ஏதேனும் ஒரு வேலைநாளில் அணுகி, தங்கள் பதிவு விவரங்களைச் சரிசெய்து கொள்ளலாம் என்று அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.