விவசாய பட்டதாரிகளுக்கு இப்போ நிறுவனத்தில் பணி
By | Published On : 28th June 2013 12:53 PM | Last Updated : 28th June 2013 01:05 PM | அ+அ அ- |

உரத்துறை நிறுவனமான இப்கோவில் பொறியியல் மற்றும் வேளாண்மை பட்டதாரிகளுக்கான பணிக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
உலகளவில் வர்த்தக தொடர்புள்ள முன்னணி நிறுவனமான இந்தியன் பார்மர்ஸ் பெர்டிலைசர் கோ ஆப்ரேட்டிவ் லிமிடெட்(IFFCO) நிறுவனத்தில் பொறியியல் மற்றும் வேளாண் பட்டதாரிகளிடமிருந்து கிராஜூவேட் இன்ஜினீயர் டிரெயினி, அக்ரிகல்சர் கிராஜூவேட் டிரெயினி பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: கிராஜூவேட் இன்ஜினீயர் டிரெயினி(ஜி.இ.டி), அக்ரிகல்சர் கிராஜூவேட் டிரெயினி(ஏ.ஜி.டி)
கல்வித்தகுதி: மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், சிவில், இன்ஸ்ட்ருமென்டேசன் அன்ட் எலெக்ட்ரானிக்ஸ், கணிப்பொறியியல் உள்ளிட்ட ஏதாவதொரு துறையில் பி.இ முடித்திருக்க வேண்டும்.
அக்ரிகல்சர் கிராஜூவேட் டிரெயினி பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் பி.எஸ்சி விவசாயம் முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 30-க்குள் இருத்தல் வேண்டும்.
பயிற்சி காலம்: 1 வருடம்
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: http://125.19.12.214/ifc/web.nsf/vwleftlinks/About?OpenDocument&RecruitGETs2013 என்ற இணையதளத்தின் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.07.2013
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://125.19.12.214 என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.