சமுதாயத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களிடையே வேலைவாய்ப்பினை உருவாக்கும் வகையில் படித்த வேலையில்லா இளைஞர்களுக்கு தொழில் செய்ய 25 சதவீத மானியத்தில் கடனுதவி வழங்கப்படுகிறது.
இது குறித்து மாவட்ட தொழில் மைய மேலாளர் மருதப்பன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பொருளாதாரத்தில் பின்தங்கிய இளைஞர்கள் பயனடையும் வகையில் மாவட்ட தொழில் மையத்தின் மூலம் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் உற்பத்தி, சேவை தொழில் மற்றும் வியாபாரம் செய்வதற்கும் மானியத்துடன் கடனுதவி வழங்கப்படுகிறது. இதில், உற்பத்தி தொழில்களுக்கு அதிகபட்சம் ரூ.5 லட்சமும், சேவை தொழில்களுக்கு ரூ.3 லட்சமும், வியாபாரத்திற்கு ரூ.1 லட்சமும் கடனுதவி அளிக்கப்பட்டு வருகிறது. இத்தொழில்கள் செய்வதற்கு இதற்கு முன்பு வரையில் வழங்கப்பட்ட மானியம் 15 சதவீதம் ஆக இருந்ததை, நிகழாண்டு முதல் 25 சதவீதமாக அரசு உயர்த்தியுள்ளது.
இத்திட்டத்தில் கடனுதவி பெற விரும்புகிற இளைஞர்கள் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், விண்ணப்பம் செய்யும் நாளில் 18 வயது பூர்த்தி அடைந்து, 35 வயதிற்குள் இருக்க வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பெண்கள், முன்னாள் ராணுவத்தினர், சிறுபான்மையினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் ஆகியோருக்கு அதிகபட்சமாக 45 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். அதோடு, குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1.50 லட்த்திற்கு மிகாமலும் இருப்பது அவசியம் ஆகும்.
மேலும், திட்ட மதிப்பீட்டு தொகையில் விண்ணப்பதாரரின் பங்காக 10 சதவீதம் செலுத்த வேண்டும். அதேபோல், எஸ்.சி,எஸ்.டி, எம்.பி.சி, சிறுபான்மையினர், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருங்கைகள் ஆகியோர் தனது பங்காக 5 சதவீதமும் செலுத்த வேண்டும். இதில், தேர்வு செய்யப்படும் பயனாளிகளுக்கு தொழில் முனைவோர் மேம்பாட்டு மையத்தின் மூலம் 7 நாள்களுக்குள் கடனுதவி வழங்கப்படும்.
எனவே இத்திட்டத்தில் பயன்பெற விரும்புகிற இளைஞர் மற்றும் மகளிர் ஆகியோர் ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட தொழில் மையத்தை அணுகி விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து நேரில் அளிக்க வேண்டும். மேலும், இது குறித்து 04562-252739, 252308 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு விவரங்களை அறிந்து கொள்ளலாம் என தொழில் மைய மேலாளர் மருதப்பன் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வருமான வரித்துறை அதிகாரிகள் தன்னை சிறை பிடித்துள்ளனர்: செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

இயக்குநர் அட்லி - பிரியா தம்பதிக்கு பெண் குழந்தை!

செல்வப்பெருந்தகை சிறைபிடிப்பு! முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!
விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு ஒத்திவைப்பு!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

