பாராளுமன்ற சட்டத்தின் கீழ் 1973 ஆண்டு ஜூலை 19 - ல் தொடங்கியது வட-கிழக்கு மலை பல்கலைக்கழகம். தற்போது ஷில்லாங் மத்திய பல்கலைக்கழகமாக செயல்பட்டு வருகிறது. இதன் கீழ் எட்டு தொழில் கல்லூரிகள், 53 இளங்கலை கல்லூரிகள் இணைக்கப்பட்டிருக்கிறது. பல்கலைக்கழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் காலியிடங்களுக்கு அறிவிப்பை வெளியிட்டு தகுதியானவர்களை தேர்வு செய்து வருகிறது.
2015 ஆம் ஆண்டிற்கான 103 பேராசிரியர், இணை பேராசிரியர், உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிப்பவர்கள் பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தில் www.nehu.ac.in. கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
நிறுவனம்: North-Eastern Hill University
பணி: கற்பித்தல்
காலியிடங்கள்: 103
பணியிடம்: ஷில்லாங்
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Political Science - 04
2. Sociology - 04
3. History - 03
4. Law - 02
5. Cultural & Creative Studies - 04
6. History & Archaeology (Tura) - 03
7. Management (Tura) - 02
8. Economics - 02
9. Commerce - 01
10. Library & Information Science - 02
11. Journalism & Mass Communication - 03
12. Tourism & Hotel Management - 01
13. Agri Business Management & Food Technology (Tura) - 03
14. Biochemistry - 01
15. Zoology - 02
16. Botany - 03
17. Geography - 02
18. Rural Dev. & Agril. Production (Tura) - 01
19. Horticulture (Tura) - 01
20. Mathematics - 04
21. Physics - 06
22. Chemistry - 02
23. Statistics - 01
24. English (Shilong - 01
25. English (Tura) - 02
26. Khasi - 01
27. Linguistics - 01
28. Garo (Tura) - 03
29. Philosophy - 03
30. Hindi - 01
31. Electronics & Comm. Engineering - 01
32. Biomedical Engineering - 04
33. Energy Engineering - 06
34. Architecture - 07
35. Nano Technology - 02
36. Computer Application (Tura) - 03
37. Education (Shillong) - 07
38. Education (Tura) - 04
39. Centre for Science Education - 01
சம்பளம் விவரம்:
பேராசிரியர் பணிக்கு மாதம் ரூ.37,400 - 67,000 + தர ஊதியம் ரூ.10,000
இணை பேராசிரியர் பணிக்கு மாதம் ரூ.37,400 - 67,000 + தர ஊதியம் ரூ.9,000
உதவி பேராசிரியிர் பணிக்கு மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.6,000
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. மற்ற அனைத்து பிரிவினருக்கும் ரூ.250.
விண்ணப்பிக்கும் முறை: www.nehu.ac.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Section Officer, Estt.I(Apptt),
NEHU, Mawkynroh, Umshing, Shillong – 793 022.
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 15.01.2016
மேலும் தகுதி, வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.nehu.ac.in/Advertisements/EsttIIEmpNotice2059Teaching_121115.pdf என்ற லிங்கை செய்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.