இந்திய ராணுவத்தில் 110 பொறியாளர் பணிக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய இருபாலரிடமிருந்தும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: பொறியாளர்
காலியிடங்கள்: 110. ஆண்கள் - 100, பெண்கள் - 10
தகுதி: பொறியியல் துறையில் சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல், ஏவியேசன், ஏரோநாட்டிக்கல், கம்ப்யூட்டர் சையின்ஸ், டெலிகம்யூனிகேஷன், இன்ஸ்ட்ருமண்டேஷன் போன்ற பிரிவுகளில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இறுதி ஆண்டு படித்துக்கொண்டிருப்பவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் அழைக்கப்பட்டு சில தேர்வுகளுக்கு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் மூலம் விண்ணப்பக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 08.01.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.