சென்னை மாநகராட்சியில் உதவி பொறியாளர், சுகாதார ஆய்வாளர் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு

சென்னை மாநகராட்சி உள்ள கீழ்காணும் காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Updated on
2 min read

சென்னை மாநகராட்சி உள்ள கீழ்காணும் காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் சென்று சேர கடைசி தேதி 31.12.2015 அன்று மாலை 5.45 மணி வரை

அறிவிப்பு எண்: 001 தேதி: 13.12.2015

பணி - காலியிடங்கள் விவரம்:

பதவி குறியீடு: AEML

பதவி குறியீட்டு எண்: 1111

பணி: உதவி பொறியாளர் (இயந்திரம்)

காலியிடங்கள்: 07

சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.5,100

சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.5,100

பதவி குறியீடு: AECL

பதவி குறியீட்டு எண்: 1112

பதவி: உதவி பொறியாளர் (சிவில்)

காலியிடங்கள்: 31

சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.5,100

பதவி குறியீடு: AEEL

பதவி குறியீட்டு எண்: 1113

பதவி: உதவி பொறியாளர் (மின்சாரம்)

காலியிடங்கள்: 14 (EEE -14, ECE-05, IT/CS - 02)

சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.5,100

பதவி குறியீடு: SIHD

பதவி குறியீட்டு எண்: 1121

பணி: சுகாரார ஆய்வாளர்

காலியிடங்கள்: 71

சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200

* காலிப்பணியிடங்கள் பொறுத்தவரையில், பெண்கள், முன்னுரிமை பெற்றவர்கள், ஆதரவற்ற விதவை, மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் ஆகியோரின் விகிதாசாரத்தை உளளிடக்கியதாகும்.

* விண்ணப்படிவம், விண்ணப்பதார்களுக்கான அறிவுரைகளில் (Notification) தெரிவிக்கப்பட்டுள்ள தகுதி, அளவுகோல் அதாவது கல்வித்தகுதிஸ வயது வரம்பு, வயதுவரம்பு தளர்வு, அரசு விதிமுறைகளின்படி இனசுழற்சி ஒதுக்கீடு போன்ற விவரங்களை செxன்னை மாநகராட்சி இணையதளத்திலிருந்து (www.chennaicorporation.gov.in)  பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

* விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்வதற்கு முன்பாக சென்னை மாநகராட்சி இணையத்தில் வெளியிடப்பட்ட "அறிவிப்பு மற்றும் விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகளை" கவனமாக படிக்கவும்.

* சென்னை மாநகராட்சி இணையதளத்தில் வெளியிடப்பட்ட, உரிய விண்ணப்ப படிவம் மற்றும் நுறைவுச்சீட்டு (Hall Ticket) ஆகியவற்றை பதிவிறக்கம் செய்து, விண்ணப்ப படிவத்தில் குறிப்பிட்ட இடத்தில் விண்ணப்பதாரரின் பாஸ்போர்ட் அளவு வண்ண புகைப்படத்தை ஒட்டி  “The  Commissioner,  Corporation  of  Chennai, Amma  Maligai,  (Ripon  Building  campus)  No.16,  E.V.R.Salai,  Chennai- 600 003 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமோ விண்ணப்பிக்க வேண்டும். 

* மேற்படி பதவிகளுக்கு தேர்வு நாள் 23.01.2016 அன்று காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை ஆகும்.

* பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி 31.12.2015 ஆகும். இதற்கு பின்பு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது. அஞ்சலில் ஏற்படும் தாமதத்திற்கு இவ்வலுவலகம் பொறுப்பேற்காது.

* மேற்படி பதவிகளுக்கு முழு தகுதிகள் பெற்று வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து இருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.

* விண்ணப்பத்துடன் தேர்வுக்கட்டணம் ரூ.500. இதனை கேட்பு வரைவோலையினை "ஆணையர் சென்னை மாநகராட்சி, சென்னை-3", என்ற பெயரில் சென்னையில் மாற்றத்தக்க வகையில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் ஏதாவதொரு கிளையில் எடுத்து விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்பிட வேண்டும். தாழ்த்தப்பட், பழங்குடி, ஆதரவற்ற விதவை, மாற்றுத்திறனாளிகள் ஆகியோக்கு தேர்வுக் கட்டணம் செலுத்துவதிலிருந்து (உரிய சான்று இணைக்கப்பட வேண்டும்) விலக்கு அளிக்கப்படுகிறது. தேர்வுக்கட்டணம் செலுத்தப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

* எழுத்துத் தேர்வுக்கான தேர்வு மையங்கள் மற்றும் நடைபெறும் தேர்வு தொடர்பானவற்றை மாற்றியமைப்பதற்கும், தேர்வினை எந்த நிலையிலும் நிறுத்துவதற்கும் மற்றும் ரத்து செய்வதற்கும் சென்னை மாநகராட்சி ஆணையரின் முழு அதிகார வரம்பிற்கு உட்பட்டது.

* இனசுழற்சி முறை பின்பற்றப்ப்டடு எழுத்துத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் (Merit) பெறும் அடிப்படையிலும் மற்றும் வாய்மொழி தேர்வு வாயிலாக அதிக மதிப்பெண் பெறும் அடிப்படையிலும் பதவிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

* தகுதியின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு, மனுதாரர்கள் விண்ணப்பத்தில் தெரிவித்த விவரம், தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் பணிபுரியும் இடம் நிர்ணயம் செய்யப்படும். இவையாவும் சென்னை மாநகராட்சி ஆணையரின் அதிகாரத்திற்குட்பட்டது.

மேலும் விவரங்கள் அறிய என்ற http://www.chennaicorporation.gov.in/corp_rect/notification.pdf லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பங்கள் பதிறக்கம் செய்ய http://www.chennaicorporation.gov.in/corp_rect/application.pdf என்ற லிங்கை கிளிக் செய்யவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com