

தமிழ்நாடு நகர் ஊரமைப்பு சார்நிலைப் பணிகளில் சேர்க்கப்பட்டுள்ள அளவர், உதவி வரைவாளர் பணிக்கு 2013- 2014 ஆம் ஆண்டுக்கான காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம நிரப்ப நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவி: அளவர், உதவி வரைவாளர்
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400
கல்வித் தகுதி: விண்ணப்பதாரர் 01.07.2015 அன்றைய நிலையில் கீழ்க்கண்டவற்றுள் ஏதாவதொரு கல்வித்தகுதியினைப் பெற்றிருக்க வேண்டும்.
அ. இந்திய அரசு, தொழிலாளார் அமைச்சகத்தால் நடத்தப்படும் வரைவாளர்(சிவில்)
என்ற பிரிவில் 1952-ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் இருந்து அறிமுகப்படுத்தப்பட்ட திருத்திய பாடத் திட்டத்தில் தேர்ச்சி அல்லது
ஆ. தலைவர், தொழில்நுட்ப தேர்வு வாரியம், மொட்ராஸ் பொறியியல் குழும் மற்றும் மையம் அவர்களால் ராணுவப் பணி வரைவாளர் (களம்)ற்கு வழங்கப்பட்ட சான்றிகழ், அல்லது
இ. கைவினைஞர் பயிற்சி மையத்திலிருந்து வழங்கப்பட்ட வரைவாளர் (சிவில்) சான்றிதழ் அல்லது
ஈ. இந்திய அரசின் தொழில் (Vocational) பணிக்கான பயிற்சிக்காக தேசிய கவுன்சில் தொழிற் பயிற்சி நிலையம் மூலம் வழங்கும் வரைவாளர் (சிவில்) பணி அல்லது அளவர் பணிக்கான தேசியப் பணிச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 01.07.2015 தேதியின்படி 35க்குள் இருக்க வேண்டும். இட ஒதுக்கீடு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
தேர்வு மையங்கள்: சென்னை , கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப்பள்ளி
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.300. இதனை "Director of Town and Country Planning" என்ற பெயருக்கு சென்னையில் மாற்றத்தக்க வகையில் வங்கி கேட்பு வரைவோலை மூலமாக மட்டுமே கட்டணம் செலுத்தப்பட வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.dtcpexam.com என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைத்தில் விண்ணப்பித்த பிறகு அதனை பதிவிறக்கம் தேவையான சான்றிதழ் நகல்கள், விண்ணப்பக் கட்டணத்துக்கான டி.டி. ஆகியவற்றை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட்டை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Directorate Of Town And Country Planning, 4th Floor, P.T. Lee Chengalvaraya Naiker Building, 807, Anna Salai, Chennai-2.
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 28.12.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய என்ற http://www.dtcpexam.com/documents/Notification%20Tamil%20New.pdf லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.