
குழந்தை மேம்பாட்டுத் திட்ட அலுவலர் எழுத்துத் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணய இணையதளத்தில் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.
இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி அலுவலகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
காலியாக உள்ள 117 குழந்தைத் திட்ட அலுவலர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு வருகிற 15-ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கென பெறப்பட்ட 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு, விண்ணப்பக் கட்டணம், தேர்வுக் கட்டணம் ஆகியவை செலுத்தப்பட்ட தகுதியுடைய விண்ணப்பதாரர்களுக்கான நுழைவுச்சீட்டுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் செய்ய: விண்ணப்பதாரர்கள், www.tnpscexams.net, www.tnpsc.gov.in ஆகிய இணையதங்களில் தங்களது பதிவு எண்ணைப் பதிவு செய்து நுழைவுச்சீட்டைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் செய்வதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் 1800 425 1002 என்ற கட்டணமில்லாத் தொலைபேசியிலோ அல்லது contacttnpsc@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொள்ளலாம்.
கிடைக்கப்பெறாதவர்கள்: நுழைவுச்சீட்டு கிடைக்கப்பெறாத விண்ணப்பதாரர்கள், தங்களது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதா என்பதை நிராகரிப்புப் பட்டியலில் உறுதி செய்துகொள்ள வேண்டும்.
அப்படி நிராகரிப்புப் பட்டியலில் இடம்பெறாத நிலையில், சரியான முறையில் விண்ணப்பித்து, உரிய விண்ணப்பக் கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரர்கள், தாங்கள் பணம் செலுத்தியதற்கான செலுத்துச் சீட்டின் (Challan) நகலுடன், விண்ணப்பதாரரின் பெயர், பதிவு எண், தேர்வுக் கட்டணம் செலுத்திய இடம், அந்த அஞ்சலகம் அல்லது இந்திய வங்கி கிளையின் முகவரி அகியவற்றை contacttnpsc@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு பிப்ரவரி 12-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.