தஞ்சாவூர் ஐ.டி.ஐ.யில் காலிப்பணியிடம் தகுதியுள்ளோர் விண்ணப்பிக்க அழைப்பு

தஞ்சாவூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள ஒரு பணிமனை உதவியாளர் மற்றும் ஒரு பண்டக உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியுள்ளோர் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Updated on
1 min read

தஞ்சாவூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள ஒரு பணிமனை உதவியாளர் மற்றும் ஒரு பண்டக உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியுள்ளோர் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தஞ்சாவூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் முதல்வர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தஞ்சாவூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள பணிமனை உதவியாளர் பணிக்கு, கம்பியாள் தொழிற்பிரிவில் தேர்ச்சி மற்றும் என்.டி.சி அல்லது என்.ஏ.சி. சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அடிப்படையில் தேர்வு நடைபெறும். விண்ணப்பிப்பவர்களுக்கு 1.7.2013 அன்று 30 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்று, குறைந்தபட்சம் மூன்றாண்டுகள் முன்அனுபவம் இருக்க வேண்டும். பண்டக உதவியாளர் பணியிடத்திற்கு தச்சர் தொழிற்பிரிவில் தேர்ச்சி மற்றும் என்.டி.சி. அல்லது என்.ஏ.சி. சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். பொதுப்பிரிவு அடிப்படையில் தேர்வு நடைபெறும். விண்ணப்பிப்பவர்களுக்கு 1.7.2013 அன்று 30 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்று, குறைந்தபட்சம் மூன்றாண்டுகள் முன்அனுபவம் இருக்க வேண்டும்.

மேற்கண்ட தகுதிகள் உடையவர்கள் தங்களின் விண்ணப்பங்களை, முதல்வர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், தஞ்சாவூர்-613009 என்ற முகவரிக்கு, அனைத்து சான்றிதழ் நகல்களுடன் ஆகஸ்ட் 10-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் பதிவஞ்சல் மூலம் அனுப்பி வைக்க வேண்டும். தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம், தேதி குறித்து தனித்தனியே கடிதம் மூலம் தெரிவிக்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com