பட்டதாரிகளுக்கு ரெப்கோ வீட்டு வசதி நிறுவனத்தில் பணி

தேசிய வீட்டு வசதி வாரியத்தின் கட்டுப்பாட்டின் கீழ் சென்னையைத் தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டும் வரும் ரெப்கோ வீட்டு வசதிக் கடன் நிறுவனத்தில் நிரப்பப்பட
பட்டதாரிகளுக்கு ரெப்கோ வீட்டு வசதி நிறுவனத்தில் பணி
Updated on
1 min read

தேசிய வீட்டு வசதி வாரியத்தின் கட்டுப்பாட்டின் கீழ் சென்னையைத் தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டும் வரும் ரெப்கோ வீட்டு வசதிக் கடன் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள கிளார்க் மற்றும் டிரெய்னி பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: கிளார்க் மற்றும் டிரெய்னி

பணியிடங்கள்: தமிழ் நாடு, ஆந்திரா, கர்னாடகா, கேரளா, ஜார்கண்ட், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேஷ், குஜராத், ஒடிசா, மேற்கு வங்கம் மற்றும் புதுச்சேரி

வயது: 01.10.2015 தேதியின்படி 25க்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: 50 சதவிகித மதிப்பெண்களுடன் பி.காம் முடித்திருக்க வேண்டும். ஏற்கனவே கடன், ரீடெய்ல் கிரெடிட், ஆபரேஷன்ஸ் போன்றவற்றில் முன் அனுபவம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும் இருசக்கர வாக ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: பரிந்துரைக்கப்பட்ட மாதிரியிலான படிவத்தை தெளிவாக பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணை்தது விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

The General Manager (HR)

Repco Home Finance Limited 3rd Floor,

Alexander Square

New No. 2/Old No. 34 & 35

Sardar Patel Road,

Guindy Chennai- 600 032.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 16.11.2015

மேலும் வயதுவரம்பு சலுகை, சம்பளம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.repcohome.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com