ஆவடி போர்த்தளவாடங்கள் தயாரிக்கும் எஞ்சின் தொழிற்சாலையில் பணி

இந்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின்கீழ் செயல்பட்டு வரும் இந்திய போர்த்தளவாடங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் ஒன்றான ஆவடி எஞ்சின் தொழிற்சாலையில் நிரப்பப்பட உள்ள
ஆவடி போர்த்தளவாடங்கள் தயாரிக்கும் எஞ்சின் தொழிற்சாலையில் பணி
Updated on
1 min read

இந்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின்கீழ் செயல்பட்டு வரும் இந்திய போர்த்தளவாடங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் ஒன்றான ஆவடி எஞ்சின் தொழிற்சாலையில் நிரப்பப்பட உள்ள குரூப் சி பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 181

பணி - காலியிடங்கள் விவரம்:

1. Fitter General (SS) - 72

2. Machinist (SS)  - 64

3.  Examiner (SS) - 16

4. Millwright (SS)  - 10

5. Electrician (SS)  - 06

6. Fitter Electronics (SS) - 06

7. Heat Treatment Operator(SS) - 06

8. Electroplater (SS) - 01

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,800

வயதுவரம்பு: 18 - 32க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று சம்மந்தப்பட்ட துறையில் ஐடிஐ முடித்து அப்ரண்டீஸ் பயிற்சி முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.50. எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள், பெண்களுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை: www.efa.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.12.2015

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://efa.gov.in/pdf/Detailed%20Advt-IE-DR-2015-16.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com