

மத்திய அரசின்கீழ் செயல்பட்டு வரும் சாலை போக்குவரத்து தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்தில் (CRRI) நிரப்பப்பட உள்ள உதவியாளர் கிரேடு -III-க்குரிய பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: CSIR-CRRI/PC/04/LDC/2015, தேதி: 07.09.2015
பணி: Assistant Grade-III (General)
காலியிடங்கள்: 09
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
வயதுவரம்பு: 26.10.2015 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினியில் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும் அல்லது ஹிந்தியில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Assistant Grade-III (Store & Purchase)
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
வயதுவரம்பு: 26.10.2015 தேதியின்படி28க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் கணினியில் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் அல்லது ஹிந்தியில் 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
பணி: AccountantGrade-III (Finance & Accounts)
காலியிடங்கள்: 03
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
வயதுவரம்பு: 26.10.2015 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: வணிகவியல் பிரிவில் பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும். மேலும் கணினியில் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் அல்லது ஹிந்தியில் 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் தட்டச்சு திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100. இதனை Director, CRRI, New Delhi என்ற பெயருக்கு டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும். மற்ற பிரிவினர்களுக்கு கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை: www.crridom.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் அட்டெஸ்ட் பெற்று விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 26.10.2015
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Controller of Administration, CSIR-Central Road Research Institute, Delhi-Mathura Road, Po,CRrtffdrRI, New Delhi-110025.
மேலும் விவரங்கள் அறிய www.crridom.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.