மத்திய தொழில் பாதுகாப்புப் படையில் பணி

சென்னையில் செயல்பட்டு வரும் மத்திய தொழில் பாதுகாப்புப் படையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Updated on
1 min read

சென்னையில் செயல்பட்டு வரும் மத்திய தொழில் பாதுகாப்புப் படையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: கான்ஸ்டபிள்/ தீயணைப்புத்துறை ஓட்டுநர்கள்

காலியிடங்கள்: 156

பணியிடம்: சென்னை

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஹெவி, லைட் மோட்டார் வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 03.10.2015 தேதியின்படி 20 - 27க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,000

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, உடல்தகுதித் தேர்வு, மருத்துவ பரிசோதனை தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.50. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள், பெண்களுக்கு கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்கும் முறை: http://www.cisf.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: DIG, CISF (South Zone) Rajaji Bhavan, "D" Block, Besant Nagar, Chennai, Tamilnadu-600090.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 10.10.2015

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com