புதுச்சேரி அரசில் சர்வேயர் பணி

புதுச்சேரி் அரசின்கீழ் செயல்பட்டு வரும் சர்வேயர் மற்றும் நில பதிவேடு துறையில் நிரப்பப்பட உள்ள நில அளவையர் பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள்
புதுச்சேரி அரசில் சர்வேயர் பணி
Updated on
1 min read

புதுச்சேரி அரசின்கீழ் செயல்பட்டு வரும் சர்வேயர் மற்றும் நில பதிவேடு துறையில் நிரப்பப்பட உள்ள நில அளவையர் பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Field Surveyor

காலியிடங்கள்: 16

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200

வயதுவரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Draughtsman (Civil) பிரிவில் ஐடிஐ முடித்து என்சிவிடி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். அல்லது பிளஸ் 2-வில் கணிதத்தை ஒரு பாடமாக படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் Autocad (Civil) பாடத்தில் சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

கடந்த 5 வருடங்களாக புதுச்சேரியில் வசிப்பவராக இருக்க வேண்டும். அதற்குரிய சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: கல்வித்தகுதி மற்றும் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.ercruitment.puducherry.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதன் பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக் கொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.10.2015

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.ercruitment.puducherry.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com