

மத்திய அரசின்கீழ் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனமான WAPCOS லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பொறியாளர் டிரெய்னி பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகி்ன்றன.
பணி: Engineer Trainee (Civil)
காலியிடங்கள்: 20
பணி: Engineer Trainee (Electrical)
காலியிடங்கள்: 05
தகுதி: பொறியியல் துறையில் சிவில், எலக்ட்ரிக்கல் பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். எம்.இ, எம்.டெக் முடித்திருந்தால் முன்னுரிமை அளிக்கப்படும். 31.08.2015 தேதியின்படி சம்மந்தப்பட்ட பிரிவில் 1 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 31.08.2015 தேதியின்படி 30க்கு இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.500. இதனை WAPCOS Limited என்ற பெயரில் GURGAON-ல் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக செலுத்த வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, குழுவிவாதம் மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Manager (P & A), WAPCOS Limited, Plot No.76-C, Sector - 18, Gugaon-122015.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 12.10.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.wapcos.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.