முதுகலை பட்டதாரிகளுக்கு ராணுவ கல்வி பிரிவில் பணி

இந்திய ராணுவ கல்வி படைப்பிரிவில் 123-வது Army Education Corps பிரிவுக்கான பயிற்சி 2016 ஜூலை மாதம் ஆரம்பமாக உள்ளது. இப்பிரிவில் சேர திருமணமான, திருமணமாகாத ஆண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Updated on
1 min read

இந்திய ராணுவ கல்வி படைப்பிரிவில் 123-வது Army Education Corps பிரிவுக்கான பயிற்சி 2016 ஜூலை மாதம் ஆரம்பமாக உள்ளது. இப்பிரிவில் சேர திருமணமான, திருமணமாகாத ஆண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணிப்பிரிவு: Army Education Corps (AEC-123) (July 2016)

சம்பளம்: ஒரு வருட பயிற்சிக்கு பின்பு நிரந்தர பணியில் அமர்த்தப்படுபவர்களுக்கு மாதம் ரூ.15,600 + தர ஊதியம் ரூ.5,600 + இதர சலுகைகள் வழங்கப்படும்.

வயதுவரம்பு: 01.07.2016 தேதியின்படி 23 - 27க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: ஆங்கிலம், பொருளாதாரம், வரலாறு, புவியியல், அரசியல் அறிவியல், தத்துவ இயல்,  உளவியல், சமூகவியல், பொது நிர்வாகம், சர்வதேச உறவுகள், சர்வதேச கல்வி போன்ற துறைகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அல்லது இயற்பியல், வேதியியல், கணிதம், இயற்பியல், தாவரவியல், ஜியாலஜி, எலக்ட்ரானிக்ஸ் துறையில் எம்.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அல்லது Chinese, Tibetan, Burmese, Pushto, Dari & Arabic மொழிகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: முதுகலை பட்டத்தில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் Service Selection Board தேர்வுக்கு அழைக்கப்படுவர். தேர்வு இரு கட்டங்களாக நடத்தப்படும்.

தேர்வு நடைபெறும் நகரங்கள்: அலகாபாத், போபால், பெங்களூர்.

நேர்முகத் தேர்வு: 2016 ஜனவரி மாதம் முதல் நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை: www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதனை இரு பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக்கொண்டு நேர்முகத் தேர்விற்கு வரும்போது பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை ஒட்டி கையெழுத்திட்டு தேவையான சான்றிதழ் நகல்களில் அட்டெஸ்ட் பெற்றது மற்றும் அசல் சான்றிதழ்களையும் கொண்டு வர வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.10.2015

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com