

ஈரோடு மாநகராட்சியில் காலியாக உள்ள 4 சுருக்கெழுத்து தட்டச்சர் பணியிடங்கள் நேர்முகத் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள ஈரோடு மாவட்ட எல்லைக்குள் வசிப்பவர்கள் நவம்பர் 6 ஆம் தேதி நடைபெறும் நேர்முகத்த தேர்வில் கலந்துகொள்ளலாம்.
பணி: சுருக்கெழுத்து தட்டச்சர்
காலியிடங்கள்: 04
வயதுவரம்பு: 01.07.2015 தேதியின்படி தாழ்த்தப்பட்ட, அருந்ததியர், பழங்குடியினர் - 18 - 35க்குள் இருக்க வேண்டும். மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் இதர வகுப்பினர் 18 - 32க்குள் இருக்க வேண்டும்.
பட்டதாரி SC,ST,MBC, BC விண்ணப்பதாரர்களுக்கு மட்டும் 5 ஆண்டுகள் உச்ச வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தட்டச்சு தேர்வில் தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் முதுநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சுருக்கெழுத்து தேர்வில் தமிழில் முதுநிலையும், ஆங்கிலத்தில் இளநிலையும் அல்லது தமிழில் இளநிலையும் ஆங்கிலத்தில் முதுநிலையும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 06.11.2015 அன்று காலை 10 மணிக்கு
நேர்முகத் தேர்விற்கு வரும்போது கொண்டுவரப்பட வேண்டியவை:
1. பள்ளி கல்லூரி மாற்று சான்றிதழ்,
2. மதிப்பெண் பட்டியல் (10, +2)
3. கல்வித்தகுதி , தொழில்நுட்ப கல்வித் தகுதி சான்றிதழ்கள்.
4. இனச்சான்றிதழ் (Community Certificate)
5. வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை (இருப்பின்)
6. அரசிதழ் பதிவு பெற்ற அலுவலரிடம் இருந்து 01.07.2015க்கு பிறகு பெற்ற புகைப்படத்துடன் கூடிய நன்னடத்தை சான்றிதழ்.
7. முன்னுரிமை அடிப்படையில் பணி நியமனம் செய்ய கோருவதாக இருந்தால், உரிய அதிகாரியின் ஒப்புதலுடன் கூடிய சான்றிதழ்களை அதற்கான உரிய படிவத்தில் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.
மேலும் விண்ணப்பதாரர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கும் விவரங்களுக்கும் மாநகராட்சி இணையதளத்தில் (http://erodecorporation.gov.in/pdf/Employment-Notice-2.pdf ) மற்றும் மாநகராட்சி மைய மற்றும் அனைத்து மண்டல அலுவலக அறிவிப்பு பலகைகளிலும் வெளியிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.