குழந்தை நல சுகாதார அலுவலர் பதவிக்கு தேர்வு: நுழைவுச் சீட்டு தயார்

மகப்பேறு-குழந்தை நல சுகாதார அலுவலர் பதவி காலிப் பணியிடங்களை நிரப்ப நடைபெறும் எழுத்துத் தேர்வுக்கான நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்யலாம் என்று தேர்வாணையம் அறிவித்துள்ளது.
Published on
Updated on
1 min read

மகப்பேறு-குழந்தை நல சுகாதார அலுவலர் பதவி காலிப் பணியிடங்களை நிரப்ப நடைபெறும் எழுத்துத் தேர்வுக்கான நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்யலாம் என்று தேர்வாணையம் அறிவித்துள்ளது.

  இதுகுறித்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

    மகப்பேறு-குழந்தைகள் நல சுகாதார அலுவலர் பதவிக்கான தேர்வு வரும் 20 ஆம் தேதியன்று சென்னை, மதுரை, கோவை ஆகிய மூன்று நகரங்களில் நடைபெறுகிறது. இந்தத் தேர்வுக்கான நுழைவுச்சீட்டுகள் தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளன.  விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்ப எண்ணை (Application ID) அச்சிட்டு நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

     நுழைவுச் சீட்டு கிடைக்கப் பெறாத விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளதா என்பதை நிராகரிப்புப் பட்டியலில் (Rejection list) தெரிந்து கொள்ளலாம்.

     நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்வதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால், 1800 425 1002 என்ற கட்டணமில்லாத தொலைபேசியிலோ அல்லது contacttnpsc000gmail.com   என்ற மின்னஞ்சல் முகவரியிலோ விவரங்களைப் பெறலாம் என்று டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com