

இந்திய அணுசக்தி துறையின்கீழ் செயல்படும் கனநீர் ஆலையில் (HeavyWater Board) நிரப்பப்பட உள்ள ஸேடெனோ மற்றும் செவிலியர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்.HWB/2/2015
பணி: Nurse/A(Group B, Non-Gazetted)
காலியிடங்கள்: 03
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800
வயதுவரம்பு: 01.08.2015 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பெண்கள்: +2 தேர்ச்சியுடன் Nursing & Mid-Wifery பாடத்தில் 3 ஆண்டு டிப்ளமோ முடித்து A-Grade நர்ஸ் -ஆக பதிவு செய்திருக்க வேண்டும்.
ஆண்கள்: A-Grade நர்ஸ் தகுதியுடன் ராணுவ மருத்துவமனைகளில் 3 ஆண்டு செவிலியர் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Scientific Assistant/B (Library) Group B (Non-Gazetted)
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800
வயதுவரம்பு: 01.08.2015 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பெண்கள்: +2 தேர்ச்சியுடன் Nursing & Mid-Wifery பாடத்தில் 3 ஆண்டு டிப்ளமோ முடித்து A-Grade நர்ஸ் -ஆக பதிவு செய்திருக்க வேண்டும்.
ஆண்கள்: நூலக அறிவியல் பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது ஏதாவதொரு துறையில் பி.எஸ்சி பட்டம் பெற்று ஒரு வருட நூலக அறிவியல் பாடத்தில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
பணி: Pharmacist/C (Group B (Non-Gazetted)
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800
வயதுவரம்பு: 01.08.2015 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பெண்கள்: +2 தேர்ச்சியுடன் D.Pharm முடித்து மத்திய, மாநில பார்மஸி கவுன்சிலில் படிப்பை பதிவு செய்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் 6 மாதம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Stenographer Grade-II (Group B, Non-Gazetted)
காலியிடங்கள்: 03
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800
வயதுவரம்பு: 01.08.2015 தேதியின்படி 27க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஆங்கில தட்டச்சில் நிமிடத்திற்கு 100 வார்த்தைகள் சுருக்கெழுத்தில் எழுதும்திறன் மற்றும் நிமிடத்திற்கு 45 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Stenographer Grade-III (Group C, Non-Gazetted)
காலியிடங்கள்: 21
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
வயதுவரம்பு: 01.08.2015 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: 50 சதவிகித மதிபெண்களுடன் தட்டச்சில் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் சுருக்கெழுத்தில் எழுதும்திறன் மற்றும் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Upper Division Clerk
காலியிடங்கள்: 13
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
வயதுவரம்பு: 01.08.2015 தேதியின்படி 27க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: கலை, அறிவியல், வணிகவியல் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஆங்கில தட்டச்சில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் மற்றும் கணினியில் பணிபுரியும் திறனும் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Driver (Ordinary Grade)
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
வயதுவரம்பு: 01.08.2015 தேதியின்படி 27க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கனரக வாகன உரிமம் பெற்றிருக்க வேண்டும். 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: கல்வித்தகுதி, பணி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் எழுத்துத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.20 இதனை ஆன்லைன் முறையில் செலுத்தவும்.
விண்ணப்பிக்கும் முறை: www.hwb.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.10.2015
மேலும் விண்ணப்பதாரர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு முழுமையான விவரங்கள் அறிய www.hwb.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.