சென்னை பல்கலைக்கழகத்தில் நூலகர் பணிகளில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Librarian - 01
சம்பளம்: மாதம் ரூ.37,400 - 67,000 +தரஊதியம் ரூ.10,000
தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் 55 சதவிகித மதிப்பெண்களுடன் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். UGC-இல் கிரேடு பி பெற்றிருக்க வேண்டும். பல்கலைக்கழகத்தில் துணைநூலகராக 13 ஆண்டு அல்லது 18 ஆண்டு கல்லூரி நூலகராக அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Deputy Librarian - 02
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.8,000
தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் 55 சதவிகித மதிப்பெண்களுடன் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். UGC-இல் கிரேடு பி பெற்றிருக்க வேண்டும். பல்கலைக்கழகத்தில் துணைநூலகர், கல்லூரி நூலகராக 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Assistant Librarian - 08
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.6,000
தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் 55 சதவிகித மதிப்பெண்களுடன் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். UGC-இல் கிரேடு பி பெற்று கணினி நூலகத்திலும் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.250. இதனை The Registrar, University of Madras, Chennai என்ற பெயருக்கு டி.டி.யாக எடுத்து அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.unom.ac.in என்ற இணையதளத்திலிருந்து பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Registrar, University of Madras, Centenary Buildings, Chepauk, Chennai - 600005.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 05.10.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.unom.ac.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.