

தமிழ்நாடு ஜவுளி மற்றும் கைத்தறித்துறைல் 2017-ஆம் ஆண்டிற்கான 12 உதவி இயக்குநர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களுக்கு அதற்கான அதிகாரப்பூர்வ இணையத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மொத்த காலியிடங்கள்: 12
பணி: Assistant Director of Handlooms
தகுதி: பொறியியல் துறையில் கைத்தறித்துறை பிரிவில் பி.இ அல்லது பி.டெக் அல்லது வணிகவியல், பொருளாதாரம், கணித்துறையில் எம்.காம், எம்.ஏ., எம்.எஸ்சி முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 01.07.2016 தேதியின்படி கணக்கிடப்படும்.
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 9,100 + தரஊதியம் ரூ.5,400
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.01.2017
கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 14.01.2017
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 08.04.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tnpsc.gov.in, http://tnpscexams.net போன்ற லிங்கில் சென்று பார்த்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.