ராணுவ அமைச்சகத்தில் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு

இந்திய ராணுவ அமைச்சகத்தின் 14-வது தளவாட நிலையத்தின் சார்பாக பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 128 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது
Updated on
1 min read

இந்திய ராணுவ அமைச்சகத்தின் 14-வது தளவாட நிலையத்தின் சார்பாக பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 128 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி - காலியிடங்கள் விவரம்:

பணி: Tradesman Mate - 98

பணி: MTS (Safaiwala) - 01

பணி: Fireman - 07

பணி: LDC - 10

பணி: Material Assistant - 12

வயதுவரம்பு: 25க்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: டிரேட்ஸ்மேன் மேட், பயர்மேன், எம்.டி.எஸ்., சபாய்வாலா, பத்தாம் வகுப்பு தேர்ச்சி மெட்டீரியல்ஸ் மேனேஜ்மென்ட் பிரிவில் பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1800, 2,400

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, உடற்திறன் தேர்வு, நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: http://indianarmy.nic.in  என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, இரண்டு சுய உறுதி செய்யப்பட்ட பாஸ்போர்ட் அளவு புகைப்படம், சுய உறுதிமொழியுடன் கூடிய சான்றிதழ் நகல்கள், ரூ.25-க்கான தபால் தலை ஒட்டப்பட்ட சுய விலாசமிட்ட கவர் ஆகியவற்றை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு சாதாரண அஞ்சல் அல்லது பதிவு அஞ்சல், விரைவு அஞ்சலில் அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்ப கவரின் கவரின் மீது Application for the Post of ____________ என்று குறிப்பிட்டு விண்ணப்பிக்கவும்.

The Commandant,

14 FAD, Pin-909714m

C/O 99 APO

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 10.03.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://indianarmy.nic.in/writereaddata/documents/14fad190216.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com