பொதுத்துறை நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள்!

அறியியல் பட்டதாரிகளுக்கு பொதுத்துறை நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் நிறைய உள்ளன. பி.இ. சிவில் படித்தவர்களுக்கும் நிறைய வேலை வாய்ப்புகள் உள்ளன.
பொதுத்துறை நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள்!

அறியியல் பட்டதாரிகளுக்கு பொதுத்துறை நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் நிறைய உள்ளன. பி.இ. சிவில் படித்தவர்களுக்கும் நிறைய வேலை வாய்ப்புகள் உள்ளன.

பொதுத்துறை நிறுவனங்கள் நடத்தும் தேர்வுகளும் பணி நியமனங்களும்:

இந்திய நிலக்கரி நிறுவனம் (Coal India Limited)
பி.இ. சிவில் படித்தோருக்கு இந்நிறுவனம் நுழைவுத்தேர்வு நடத்தியும், நேர்முகத்தேர்வு நடத்தியும் தேர்வு செய்து பணி வாய்ப்புக் கொடுக்கிறது. இத்தேர்வு எழுத 60 சதவிகித மதிப்பெண்கள் பெற்றிருத்தல் கல்வித்தகுதியாகும். சிவில் படித்தோர் மட்டுமின்றி பி.டெக், ஃ எ.எம்.ஐ.இ, பி.எசி. போன்ற படிப்புகளில் பட்டம் பெற்றோரும் இந்நிறுவனத் தேர்வுகளை எழுதலாம்.

நேஷனல் தெர்மல்பவர் கார்பரேஷன் (National Thermal Power corporation)இப்பொதுத்துறையில் பணியில் சேர பி.இ/ எ.எம்.ஐ.இ. ஆகிய படிப்புகளில் ஏதாவதொன்றில் 65 சதவிகித மதிப்பெண்கள் பெற்றிருத்தல் கல்வித் தகுதியாகும்.

எஸ்.சி/எஸ்.டி/மாற்றுத்திறனாளிகள் 55 சதவிகித மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதும். இந்நிறுவனப் பணிக்கு கேட் மதிப்பெண்ணுடன், நேர்முகத்தேர்வும் நடத்தப்படும். இத்தேர்வுகளில் வெற்றி பெறுவோருக்குப் பணி வாய்ப்பு வழங்கப்படும்.

ஆயில் மற்றும் நேச்சுரல் காஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் (Oil and Natural Gas corporation Ltd)
இந்நிறுவனத்தில் பணிவாய்ப்புப் பெற பி.இ/அறிவியல் பாடங்கள் படித்தவர்கள் 60 சதவிகித மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். எம்.பி.ஏ. சட்டம் படித்தோரும் இந்நிறுவனத் தேர்வை எழுத அனுமதிக்கப்படுவர். ஐ.சி.டபிள்யு., சி.ஏ., எம்.பி.பி.எஸ் படித்துள்ளோர் தத்தமது படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.

இந்நிறுவனம் நடத்தும் எழுத்துத் தேர்வுடன் நேர்முகத்தேர்வும் நடத்தப்படும். இத்தேர்வுகளில் வெற்றி பெறுவோருக்குப் பணி வாய்ப்பு வழங்கப்படும்.

இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்பரேஷன் லிமிடெட் (Hindustan Petroleum Corporation LImited)
இந்நிறுவனப் பணியில் சேருவதற்கு பி.இ/பி.டெக் படிப்புகளில் பொதுப் பிரிவினரும், ஓபிசியினரும் 60 சதவிகித மதிப்பெண்கள் பெற்றிருத்தல் கல்வித் தகுதியாகக் கொள்ளப்படும். எஸ்.சி/எஸ்.டி/மாற்றுத்திறனாளியினர் 50 சதவிகித மதிப்பெண்கள் பெற்றிருத்தல் வேண்டும். கேட் தேர்வில் வெற்றி பெற்றிருத்தல் வேண்டும். அத்துடன் குழுவிவாதம், நேர்முகத்தேர்வு ஆகியனவும் நடத்தப்படும். இத்தேர்வுகளில் வெற்றி பெறுவோருக்குப் பணிவாய்ப்பு வழங்கப்படும்.

நேஷனல் அலுமினியம் கம்பெனி லிமிடெட் (National Aluminium Company Limited)
பி.இ / பி.டெக். படித்துள்ளப் பொதுப் பிரிவினர் மற்றும் ஓபிசி பிரிவினரும் 65 சதவிகித மதிப்பெண்கள் பெற்றிருத்தல் வேண்டும். எஸ்.சி/எஸ்.டி. மற்றும் மாற்றுத் திறனாளிகள் 55 சதவிகித மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். கேட் தேர்வில் வெற்றி பெற்றிருப்பதுடன் குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்விலும் வெற்றி பெற வேண்டும். அவ்வாறு வெற்றி பெறுவோருக்குப் பணி வாய்ப்பு வழங்கப்படும்.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (Indian Oil Corporation)
பி.இ. பி.டெக் படித்துள்ளோர் 65 சதவிகித மதிப்பெண்களும் எஸ்.சி/எஸ்.டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் 55 சதவிகித மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும். கேட் தேர்வில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். அவ்வாறு வெற்றி பெற்றோருக்கு இந்நிறுவனம் சார்பில் நேர்முகத் தேர்வு நடத்தப்படும். இதில் வெற்றி பெறுவோர்க்கு பணி வாய்ப்பு வழங்கப்படும்.

ஸ்டீல் அதாரிட்டி ஆப் இந்தியா லிமிடெட் (Steel Authority of India Limited)
பி.இ. பட்டம் பெற்றுள்ள பொதுப்பிரிவினர்/ ஓபி.சி-யினர் 65 சதவிகித மதிப்பெண்களும் எஸ்.சி/எஸ்.டி/ மாற்றுத்திறனாளிகள், துறை சார்ந்து தேர்வு எழுதுவோர் பொறியியல் பட்டத்தில் 55 சதவிகித மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும். இந்நிறுவனம் சார்பாக நடத்தப்படும் எழுத்துத் தேர்விலும் நேர்முகத்தேர்விலும் வெற்றி பெறுவோர்க்கு பணி வாய்ப்பு வழங்கப்படும்.

இந்தியன் ஸ்பேஸ் ரிசர்ச் ஆர்கனைசேசன் (Indian Space Research Organisation)இந்நிறுவனத்தில் வேலைவாய்ப்புப் பெற பி.இ/பி.டெக். ஆகியவற்றில் ஏதாவதொன்றில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது ஏதாவதொரு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில், கல்வி நிறுவனத்தில் 65 சதவிகித மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். இந்நிறுவனம் சார்பாக நடத்தப்படும் எழுத்துத் தேர்விலும் நேர்முகத்தேர்விலும் வெற்றி பெற வேண்டும். அவ்வாறு வெற்றி பெறுவோருக்கு பணிவாய்ப்பு வழங்கப்படும்.

தில்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேசன் (Delhi Metro Rail Corporation)
இந்நிறுவனத்தில் பணி வாய்ப்புப் பெற விரும்புவோர் பி.இ/பி.டெக் ஏதாவதொரு படிப்பில் 70 சதவிகித மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். கேட் தேர்வில் வெற்றி பெற்றிருப்பதுடன், இந்நிறுவனம் நடத்தும் குழு விவாதத்திலும் நேர்முகத் தேர்விலும் தேர்ச்சி பெற்றால் பணிவாய்ப்பு வழங்கப்படும்.

விசாக் ஸ்டீல் பிளாண்ட் (Vizag Steel Plant)
இந்நிறுவனத்தின் தேர்வை எழுத விரும்புவோர் பி.இ / பி.டெக் ஏதாவதொரு படிப்பில் பொதுப்பிரினரும் ஓபிசி பிரிவினரும் 60 சதவிகித மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி/எஸ்.டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் 50 சதவிகித மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதும். இந்நிறுவனத்தில் பணிவாய்ப்புப் பெற இந்நிறுவனம் நடத்தும் எழுத்துத் தேர்விலும் குழு விவாதத்திலும் நேர்முகத் தேர்விலும் தேர்ச்சி பெற வேண்டும்.

ஹெவி இஞ்சினியரிங் கார்ப்பரேசன் லிமிடெட் (Heavy Engineering Corporation Limited)
இத்துறையில் பணிவாய்ப்புப் பெற பி.இ/பி.டெக்/எ.எம்.ஐ.இ. படித்துள்ளோர் 60 சதவிகித மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். கேட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பதுடன் இந்நிறுவனம் நடத்தும் நேர்முகத் தேர்விலும் தேர்ச்சி பெற்றால் பணி வாய்ப்புக் கிடைக்கும்.

தில்லி டெவலப்மெண்ட் அதாரிட்டி (Delhi Development Authority)
இத்துறையில் பணிவாய்ப்புப் பெற பி.இ/பி.டெக்/எ.எம்.ஐ.இ ஆகிய படிப்புகளில் ஏதாவதொன்றில் 60 சதவிகித மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். கேட் தேர்வில் வெற்றி பெற்றிருப்பதுடன் இந்நிறுவனம் நடத்தும் நேர்முகத் தேர்விலும் வெற்றி பெற்றால் பணி வாய்ப்புக் கிடைக்கும்.

எலக்ட்ரானிக்ஸ் கார்பரேசன் ஆப் இந்தியா லிமிடெட் (Electronic Corporation of India Limited)
பொறியியல் படிப்பில் 65 சதவிகித மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி/எஸ்.டி/ மாற்றுத்திறனாளிகள் 55 சதவிகித மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். இத்துறையில் பணியாற்ற விரும்புவோர் இத்துறை நடத்தும் எழுத்துத் தேர்விலும் நேர்முகத்தேர்விலும் வெற்றி பெற்றால் பணிவாய்ப்பு வழங்கப்படும்.

ஒடிசா பவர் ஜெனரேசன் கார்ப்பரேசன் லிமிடெட் (Odisha Power Generation Corporation Limited)
இத்துறையில் பணிவாய்ப்புப் பெற விரும்புவோர் பி.இ/பி.டெக்/எ.எம்.ஐ.இ. ஆகிய படிப்புகளில் ஏதாவதொன்றில் 60 சதவிகித மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். இத்துறை சார்பாக நடத்தப்படும் எழுத்துத் தேர்வு, குழு விவாதம், நேர்காணல் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றால் பணிவாய்ப்பினைப் பெறலாம்.

தாஸ்கின் குஜராத் விஜ் கம்பெனி லிமிடெட்  (Dakshin Gujarar Vij.Company Limited)இத்துறையில் பணியில் சேர விரும்புவோர் பி.இ/பி.டெக் ஆகிய படிப்புகளில் ஏதாவதொன்றில் 60 சதவிகித மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி/எஸ்.டி/ மாற்றுத்திறனாளிகள் 55 சதவிகித மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதுமானது. இத்துறை நடத்தும் எழுத்துத்தேர்வில் வெற்றி பெறுவதுடன் இத்துறை நடத்தும் நேர்முகத் தேர்விலும் தேர்ச்சி பெற்றால் பணிவாய்ப்புக் கிடைக்கும்.

ராஜஸ்தான் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (Rajasthan Public Service Commission)
ஆர்.பி.எஸ்.சி நடத்தும் பொறியியல் சார்ந்த பணிக்கான வேலை வாய்ப்பினைப் பெறுவதற்குக் குறைந்த பட்ச கல்வித் தகுதியாக பி.இ/பி.டெக் படிப்புகளில் ஏதாவதொன்றில் 60 சதவிகித மதிப்பெண்களுக்குக் குறையாமல் பெற்றிருக்க வேண்டும்.
ஆர்.பி.எஸ்.சி நடத்தும் எழுத்துத் தேர்வில் வெற்றி பெறுவோருக்கு நேர்முகத் தேர்வு டத்தப்படும். இத்தேர்வுகளில் தேர்ச்சி அடைவோருக்குப் பணி வாய்ப்பு வழங்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com