+2 முடித்தவர்களுக்கு எல்லைக் காவல் படையில் பணி

எல்லைக் காவல் படை என அழைக்கப்படும் 'பார்டர் செக்யூரிட்டி போர்ஸ் (பி.எஸ்.எப்.)’ பிரிவில் சப்-இன்ஸ்பெக்டர்
Published on
Updated on
1 min read

எல்லைக் காவல் படை என அழைக்கப்படும் 'பார்டர் செக்யூரிட்டி போர்ஸ் (பி.எஸ்.எப்.)’ பிரிவில் சப்-இன்ஸ்பெக்டர், ஹெட் கான்ஸ்டபிள் மற்றும் சி.டி. (குரூவ்) பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

22 - 28க்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். +2 முடித்திருக்க வேண்டும்.

சான்றிதழ் சரிபார்ப்பு, உடல் அளவு தேர்வு, உடல்திறன் தேர்வு, திறன் தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கல் ரூ.50 கட்டணமாக செலுத்த வேண்டும். இதனை டி.டி. அல்லது அஞ்சல் ஆணையாக எடுத்து இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

இதேபோன்று எல்லைக்காவல் படையில் 196 கான்ஸ்டபிள் (ஜி.டி.) பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  இதற்கு 01.08.16 தேதியின்படி 18 - 23க்குள் இருக்க வேண்டும். இந்த பணிகளுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியும், குறிப்பிட்ட உடல்தகுதியும் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை The Commandant, 25 Bn BSF, Chhawla Camp, Post OfficeNajafgarh, New Delhi, Pin Code110071 என்ற அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்களை www.bsf.nic.in   என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com