Enable Javscript for better performance
Punjab National Bank Recruitment 2016 191 Specialist Officer Jobs- Dinamani

சுடச்சுட

    

    பஞ்சாப் நேஷனல் வங்கியில் 191 சிறப்பு அதிகாரி பணி: விண்ணப்பிக்க அழைப்பு

    By Venkatesan.R  |   Published on : 18th August 2016 12:07 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பஞ்சாப் நேஷனல் வங்கியில் 2016-ஆம் ஆண்டில் நிரப்பப்பட உள்ள 191 சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளம் www.pnbindia.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
    மொத்த காலியிடங்கள்: 191
    பணி: Specialist Officer
    பணியிடம்: இந்தியா முழுவதும்
    தகுதி: பட்டம், முதுகலை பட்டம், பி.இ, பி.டெக் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
    தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
    விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600 மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும்.
    விண்ணப்பிக்கும் முறை: www.pnbindia.com என்ற இணையதளத்தின் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
    ஆன்லைன் விண்ணப்பிக்க தொடக்க தேதி: 20.08.2016
    ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.09.2016
    எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 2016 நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடைபெறலாம்.
    மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.pnbindia.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai