விண்ணப்பித்துவிட்டீர்களா..? பிஎஸ்என்எல் நிறுவனத்தில் 2510 இளநிலை டெலிகாம் அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி

மத்திய அரசின் பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்தில் 2017- 18-ஆம் ஆண்டிற்கான 2510 இளநிலை
விண்ணப்பித்துவிட்டீர்களா..? பிஎஸ்என்எல் நிறுவனத்தில் 2510 இளநிலை டெலிகாம் அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி
Updated on
1 min read

மத்திய அரசின் பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்தில் 2017- 18-ஆம் ஆண்டிற்கான 2510 இளநிலை டெலிகாம் அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள பொறியியல் பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: ஜுனியர் டெலிகாம் அதிகாரி (Junior Telecom Officer )
மொத்த காலியிடங்கள்: 2,510. (தமிழகத்திற்கான காலியிடங்கள் 103)
சம்பளம்: மாதம் ரூ.16,400 - 40,500
தகுதி: பொறியியல் துறையில் டெலிகாம், எலக்ட்ரானிக்ஸ், வானொலி, கணினி அறிவியல், எலக்ட்ரிக்கல், தகவல் தொழில்நுட்பம், இன்ஸ்ட்ரூமென்டேஷன் போன்ற ஏதாவதொரு துறையில் பி.இ அல்லது பி.டெக் அல்லது எம்.எஸ்சி (எலக்ட்ரிக்கல், கணினி அறிவியல் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். மேலும் கேட் தேர்வுக்கு விண்ணப்பித்திருக்க வேண்டும்
தேர்வுசெய்யப்படும் முறை : 2017 கேட் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த பணியிடங்களுக்கு பி.எஸ்.என்.எல் தனிப்பட்ட தேர்வுகளை நடத்துவது கிடையாது.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.300 கட்டணமாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.externalbsnlexam.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.04.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.externalbsnlexam.com/documents/GATE_JTODR_Notification.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com