திருச்சி பெல் நிறுவனத்தில் அப்பரண்டீஸ் பயிற்சிக்கு 20க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

திருச்சி பெல் நிறுவனத்தில் அப்பரண்டீஸ் பயிற்சிக்கு 20க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

அனைவராலும் பெல் என அழைக்கப்படும் மத்திய பொதுத் துறை மின்சாதப் பொருள்கள் உற்பத்தி நிறுவனமான பி.எச்.இ.எல் நிறுவனத்தின்
Published on

அனைவராலும் பெல் என அழைக்கப்படும் மத்திய பொதுத் துறை மின்சாதப் பொருள்கள் உற்பத்தி நிறுவனமான பி.எச்.இ.எல் நிறுவனத்தின் திருச்சி கிளையில் 2017 - 2018-ஆம் ஆண்டிற்கான 770 ஃபிட்டர், வெல்டர் (ஜி & இ), டர்னர், மெஷினிஸ்ட், ஏசி மற்றும் குளிர்பதன, கருவி மெக்கானிக், மின்னணு மெக்கானிக், ஓயர்மேன், எலக்டிரீசியன், கார்பெண்டர், பிளம்பர், எம்எல்டி நோயியல் பிரிவுக்கான தொழில் பழகுநர் பயிற்சிக்கான (அப்பரண்டீஸ்) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 770
பணியிடம்: திருச்சிராப்பள்ளி
துறைவாரியான தொழில் பழகுநர் பயிற்சிக்கான காலியிடங்கள் விவரம்:
1. Fitter - 236
2. Welder (G&E) - 191
3. Turner - 30
4. Machinist - 31
5. Electrician - 63
6. Wireman - 30
7. Electronic Mechanic - 30
8. Instrument Mechanic - 23
9. AC & Refrigeration - 20
10. Draughts Man (Mechanical) - 15
11. Programme & System Administration Assistant - 36
12. Forger & Heat Treater - 10
13. Carpenter - 26
14. Plumber - 26
15. MLT Pathology - 03
வயதுவரம்பு: 01.04.2017-ஆம் தேதியின்படி 18 - 27க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: சம்மந்தப்பட்டதுறையில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.bheltry.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
உதவித்தொகை: பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அரசு விதிகளின்படி நிர்ணயிக்கப்பட்டுள்ள உதவித்தொகை மாதந்தோறும் வழங்கப்படும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.04.2017
தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களின் விவரம் 25.04.2017 அன்று வெளியிடப்படும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.bheltry.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com