

மத்திய அரசு துறைகளில் நிரப்பப்பட உள்ள மொழிப்பெயர்ப்பாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை மத்திய அரசு அலுவலர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து வரும் மே 5-ம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: இளநிலை மொழிப்பெயர்ப்பாளர்
பணி: இளநிலை ஹிந்தி மொழிப்பெயர்ப்பாளர்
பணி: முதுநிலை ஹிந்தி மொழிப்பெயர்ப்பாளர்
பணி: ஹிந்தி பிரத்யாபக்
வயதுவரம்பு: 01.01.2017 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஹிந்தி, ஆங்கிலம் துறையில் முதுகலை பட்டம் அல்லது இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். முதுகலை டிப்ளமோ மொழிபெயர்ப்பு முடித்து பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் விவரித்தல் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100. மற்ற பிரிவினருக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: www.ssconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 05.05.2017
தேர்வு நடைபெறும் தேதி: 15.06.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.ssconline.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.