

மத்திய அரசு நிறுவனமான பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து 16க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 382
பணியிடம்: இந்தியா முழுவதும்
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Field Engineer (Electrical) - 80
2. Field Engineer (Civil) - 42
3. Field Supervisor (Electrical) - 192
4. Field Supervisor (Civil) - 63
5. Field Officer (Environment & social Management) - 5
சம்பளம்: மாதம் ரூ.5400 - 20200 + தர ஊதியம் ரூ.1900
தகுதி: பொறியியல் துறையில் 70 சதவீத மதிப்பெண்களுடன் எலக்ட்ரிக்கல் பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 29க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு Field Engineer பணிக்கு ரூ.400, Field Supervisor பணிக்கு ரூ.300 கட்டணமாக செலுத்த வேண்டும்.
எஸ்.சி, எஸ்.டி., முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள் கட்டணம் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை: http://www.powergridindia.com -என்ற இணைய தளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 16.08.2017
எழுத்துத் தேர்வு 2017 செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடத்தப்படலாம்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.powergridindia.com என்ற இணையதளத்திற்கு சென்று Career Section - Job Opportunities - Openings - National Career Service லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.