புதுதில்லியில் செயல்பட்டு வரும் தேசிய எலக்ட்ரானிக்ஸ் கழகத்தில் நிரப்பப்பட உள்ள விஞ்ஞானி பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர அறிக்கை எண்.NIELIT/NDL/NIC/2017/17
பணி: Scientist - 'B'
காலியிடங்கள்: 81
சம்பளம்: மாதம் ரூ.56,100 - 1,77,500
பணி: Scientific/ Technical Assistant 'A'
காலியிடங்கள்: 259
சம்பளம்: மாதம் ரூ.35,400 - 1,12,400
தகுதிகள்: பொறியியல் துறையில் கணினி அறிவியல், தகவல் தொடர்பியல், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலிகம்யூனிகேசன் போன்ற துறைகளில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். எம்.எஸ்சி, எம்எஸ், எம்சிஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 28.08.2017 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
எழுத்துத்தேர்வு நடைபெறும் இடங்கள்: சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், திருவனந்தபுரம்
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: தில்லி
விண்ணப்பக் கட்டணம்: ரூ.800. இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். பெண்கள், எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: www.nielit.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.08.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.nielit.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.