

தமிழக அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள ECG டெக்னீசியன் பணியிடங்களுக்கான அறிவிப்பை மருத்துவ பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அறிக்கை எண்.10/MRB/2017
மொத்த காலியிடங்கள்: 09
பணி: ECG Technician
தகுதி: +2 தேர்ச்சியுடன் Electro Cardiogram/Treadmil Technician துறையில் 1 ஆண்டு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400
வயதுவரம்பு: 01.07.2017 தேதியின்படி 18 - 30க்குள் இருக்க வேண்டும். இட ஒதுக்கீடு பிரிவினருக்கு அரசு விதிகளின் படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.500. இதர பிரிவினருக்கு ரூ.250. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.
தேர்வு செய்யப்படும் முறை: கல்வித்தகுதியில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 11.09.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரி்ந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.