நாமக்கல் மாவட்ட நியாயவிலைக் கடைகளில் விற்பனையாளர், உதவியாளர் வேலைக்கு விண்ணப்பிக்க அழைப்பு

நாமக்கல் மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கூட்டுறவுச் சங்கங்களால் நடத்தப்படும் நியாயவிலைக் கடைகளில்
நாமக்கல் மாவட்ட நியாயவிலைக் கடைகளில் விற்பனையாளர், உதவியாளர் வேலைக்கு விண்ணப்பிக்க அழைப்பு
Published on
Updated on
1 min read

நாமக்கல் மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கூட்டுறவுச் சங்கங்களால் நடத்தப்படும் நியாயவிலைக் கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர் மற்றும் உதவியாளர் பணியிடங்களுக்கு +2 மற்றும் பத்தாம் வகுப்பு முடித்தவர்களிடமிருந்து டிசம்பர் 15க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்.01/2017 தேதி: 24.11.2017

மொத்த காலியிடங்கள்: 126
காலியிடங்கள் விவரம்: 
பணி: நியாயவிலைக் கடை விற்பனையாளர் (Salesperson) - 125 
சம்பளம்: தொகுப்பு ஊதியம் ஒரு ஆண்டுக்கு ரூ.5,000 அதனைத் தொடர்ந்து ஊதிய விகிதம் ரூ.4,300 - 12,000
தகுதி: பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி(+2) பெற்றிருக்க வேண்டும் அல்லது அதற்கு சமமான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுதவும் மற்றும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.

பணி: கட்டுநர் (Packer) - 01
சம்பளம்: தொகுப்பு ஊதியம் ஒரு ஆண்டுக்கு ரூ.4,250, அதனைத் தொடர்ந்து ஊதிய விகிதம்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுதவும் மற்றும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
மேற்கண்ட பணியிடங்கள் நேரடி நியமனத்தின் போது அரசுப் பணிக்கு இனச் சுழற்சி முறை பின்பற்றப்படுகிறது.

வயதுவரம்பு: 01.01.2017 தேதியின் படி 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை  முப்படி செலான் சங்க செலான் மூலமாக அந்தந்த மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் எந்த கிளையிலும் கூட்டுறவு சங்கங்களின் மாவட்ட ஆள்சேர்ப்பு மையத்தின் சேமிப்புக் கணக்கில் செலுத்த வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: இணைப்பதிவாளர்/தலைவர், மாவட்ட  மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம், அறை எண்.2, இரண்டாம் தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், நாமக்கல் மாவட்டம். 

விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட அலுவலக முகவரியில் வேலை நாட்களில் நேரில் சென்று விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து, நேரிலோ அல்லது அஞ்சல் மூலம் அனுப்பலாம். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி தேதி: 15.12.2017

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com