சென்னை பல்கலைக்கழகத்தில் சிறப்பு விரைவுரையாளர் வேலை: 6க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

சென்னை பல்கலைக்கழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டம் நெமிலி மற்றும் திருவள்ளூர் மாவட்டம் திருவொற்றியூர் கிராமத்தில் உள்ள கலை மற்றும்
சென்னை பல்கலைக்கழகத்தில் சிறப்பு விரைவுரையாளர் வேலை: 6க்குள் விண்ணப்பிக்க அழைப்பு
Published on
Updated on
1 min read

சென்னை பல்கலைக்கழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டம் நெமிலி மற்றும் திருவள்ளூர் மாவட்டம் திருவொற்றியூர் கிராமத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஒரு வருடத்திற்கான ஒப்பந்த அடிப்படையிலான 60 சிறப்பு விரிவுரையாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து வரும் 6-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 60 

பணி: Guest Lecturers

துறைவாரியான காலியிடங்கள் விவரம்:

திருவொற்றியூர்(30) - நெமிலி (30)
1. Tamil  6    -    8
2. English & Soft skills   7    -   3
3. Computer Science     5    -  5
4. Commerce                 8    -  9
5. Mathematics & Statistics   2  -  1
6. Economics     1   -  1
7. Environmental Studies  0    - 1
8. History       0    -   1
9. Physical Education Trainer  1   -  1

தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் 55 சதவீத மதிப்பெண்களுடன் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது NET, SLET, SET, முனைவர் பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
 
விண்ணப்பிக்கும் முறை: www.unom.ac.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டிய முகவரி:
1. The Principal, University of Arts and Science Colleges,
(University Constituent College)
Thiruvottiyur, Poonthota Street,
Tiruvottiyur, Chennai – 600 119.

2. The Principal, University of Arts and Science Colleges,
(University Constituent College),
East Coast Road, Nemmeli - 603104

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி தேதி: 06.12.2017

நேர்முகத் தேர்வு 7.12.2017 அன்று காலை 10 மணிக்கு நடைபெற்றும். இதுகுறித்து விவரம் விண்ணப்பதாரர்களின் மின்னஞ்சல் முகவரி மூலம் தெரிவிக்கப்படும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.unom.ac.in/uploads/appointments/ucc-gl-notiffication-2017_updated_20171127120729_47489.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com